சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் இவர்தான்.. 2வது, 3வது இடம் யாருக்கு? ஏமாற்றம் அடைந்த பூஜா..!

Published:

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 9 என்ற நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 5 மணி நேரத்திற்கு நடந்த இந்த நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் 9 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு ஐந்து பாடகர்கள் தகுதி பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அபிஜித், அருணா, பூஜா, பிரியா மற்றும் பிரசன்னா ஆகிய ஐந்து பேர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

super singer1

இதனை அடுத்து இந்த ஐவரில் ஒருவருக்கு டைட்டில் பட்டம் கிடைக்கும் என்பதும் அவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் 10 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணா என்பதை அறிவித்து அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

aruna

இதனை அடுத்து இரண்டாவது இடம் பிரியாவுக்கும் மூன்றாவது இடம் பிரசன்னாவுக்கும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவரும் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவருமான பூஜாவுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றமாகவே கருதப்பட்டது.

aruna1

அதேபோல் முதல் நபராக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அபிஜித்துக்கும் எந்த பரிசும் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமே. இருப்பினும் அருணா என்ற ஒரு தகுதியான நபருக்கு தான் இந்த டைட்டில் பட்டம் கிடைத்துள்ளது என்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...