அல்லு அர்ஜுன் இத்தனை கோடிக்கு அதிபதியா? மலைக்க வைக்கும் சொத்து விபரம்..!

By John A

Published:

புஷ்பா படத்தின் மூலம் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்திருக்கும் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யப்பட வைக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் 2 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக விஜேதா என்கிற படத்தில் நடித்தார். இதையடுத்து வளர்ந்து அனிமேட்டர் ஆக வேண்டுமென ஆசைப்பட்ட அல்லு அர்ஜுன், பின்னர் சினிமாவின் பக்கம் திரும்பினார்.

கடந்த 2003-ல் வெளிவந்த கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி என்றாலும் அல்லு அர்ஜுனை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற படம் 2004-ம் ஆண்டு நடித்த ஆர்யா திரைப்படம். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் இவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது.

எனினும் இதையடுத்து 2005-ல் இவர் நடித்த Bunny திரைப்படம் ரிலீசாகி அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்திவிட்டது. அத்தேடு இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அலவைகுண்டபுரமுலு மற்றும் புஷ்பா ஆகிய திரைப்படங்கள் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. குறிப்பாக புஷ்பா திரைப்படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றிபெற்று அவரை பான் இந்தியா ஸ்டாராக உயர்த்தியது.

ஜெயலலிதா பாணியைப் பின்பற்றும் விஜய்.. மா.செ. கூட்டத்தில் நடந்த அந்த முக்கிய நிகழ்வு..

தற்போது தெலுங்கு திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். அத்தோடு ஒரு படத்திற்காக ரூ.100 முதல் ரூ.125 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் படங்கள் தவிர விளம்பரங்களிலும் அதிகளவில் நடித்து வருகிறார். ரெட் பஸ், கோக், Frooti, KFC, Zomato ஆகிய நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிக்க ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மேலும் மும்பையில் ஒரு பிளாட்டும், ஹைதராபாத்தில் 100 கோடி மதிப்புள்ள இரண்டு சொகுசு பங்களாக்களும் உள்ளதாம். அதுமட்டுமின்றி இவர் ஐதராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன்மூலமும் இவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறதாம்.

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கார் மீது அலாதி பிரியம். இவர் ரூ.1.2 கோடி மதிப்புள்ள ஜாகுவார் XJL, ரூ.86 லட்சம் மதிப்புள்ள ஆடி A7, ரூ.80 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ X5 ஆகிய சொகுசு கார்கள், ஹார்ட்லி டேவிட்சன் பைக் ஆகியவை உள்ளன. அத்தோடு இதுதவிர தனக்கு தேவையான அதிநவீன வசதிகளுடன் கூடிய வேனிட்டி வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வேனின் மதிப்பு மட்டும் ரூ.7 கோடியாம்.

அமைச்சர் பதவியை வேண்டாம் என உதறிய எம்.ஜி.ஆர்., அறிஞர் அண்ணாவுக்கே அதிர்ச்சி கொடுத்த புரட்சித் தலைவர்

இவை அனைத்தையும் தவிர நடிகர் அல்லு அர்ஜுன் சொந்தமாக ஆஹா என்கிற ஓடிடி தளத்தையும் வைத்துள்ளார். இதன்மூலம் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்கள், வெப் தொடர்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும சோஷியல் மீடியாக்களில் இன்ஸ்ட்டாவில் 24.4 மில்லியன் பாலோர்களையும், எக்ஸ் தளத்தில் 8மில்லியன் பாலோர்களையும் பெற்று அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார் இந்த டோலிவுட் ரைசிங் ஸ்டார்.

மேலும் உங்களுக்காக...