இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்!

Published:

அண்ணன் – தங்கை பாசத்திற்கே எடுத்துக் காட்டாய் விளங்கி நிஜத்திலும் ஒவ்வொரு அண்ணன், தங்கையையும் கண்ணீர் விட்டு அழ வைத்த படம்தான் பாசமலர். இதில் சிவாஜி கணேசனும், சாவித்திரியும் நிஜ அண்ணன்-தங்கை போல் வாழ்ந்திருப்பார்கள். இதேபோல் நிஜத்திலும் தனது உடன் பிறவா தங்கைகளாக நடிகர் திலகம் பாவித்தது இருவரைத்தான். ஒருவர் ஆச்சி மனோரமா, மற்றொருவர் இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

இவர்களுக்குள்ளான சகோதரன், சகோதரி உறவு மிக ஆழமானது. தன்னைவிட ஒரு வயது மட்டுமே பெரியவரான சிவாஜி கணேசன், லதா சென்னை வரும்போதெல்லாம் தன் வீட்டில் தங்குவதற்கு வசதியாகத் தன் பங்களாவின் ஒரு பகுதியில் இன்னொரு குட்டி பங்களாவையே கட்டித் தந்திருக்கிறாராம்.

மேலும் சிவாஜி கணேசனும் எப்போது மும்பை சென்றாலும் லதாவின் வீட்டில்தான் தங்குவாராம். லதா மங்கேஷ்கர் சிவாஜி வீட்டிற்கு வந்து விட்டால் போதும், வீடே குதூகலத்தில் மூழ்கிவிடும். வீட்டில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கும் போதே லதா பாடிக் கொண்டிருப்பாராம். அதை நான் கேட்டு நடிகர் திலகமும் ரசிப்பாராம்.

அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது பாடகி லதா தன்னுடைய வீட்டில் இருந்து சிவாஜி குடும்பத்திற்கு புதுத்துணி மற்றும் பலகாரங்களையும் அவர் அனுப்பி வைப்பாராம். இதுமட்டுமன்றி லதா மங்கேஷ்கர் நடிகர் திலகம் பிரபுவுக்காக ஆனந்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆராரோ.. ஆராரோ பாடலை இளையராஜா இசையில் அற்புதமாகப் பாடியிருப்பார். இப்பாடலுக்காக அவர் சம்பளம் கூட வாங்கவில்லையாம். அண்ணன் சிவாஜிக்காக இதைக்கூடவா செய்யமாட்டேன் என்று பாடகி லதா மங்கேஷ்கர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டாராம்.

வருடத்தில் எது தவறினுலும் ரக்ஷா பந்தன் பண்டிகை யின்போது சிவாஜிக்கு ராக்கி அனுப்பாமல் இருக்கவே மாட்டாராம். அதை அன்புடன் சிவாஜியும் தங்கை லதா மங்கேஷ்கர் அனுப்பிய அந்த ராக்கியைப் பல நாட்கள் கையிலேயே கட்டிக் கொண்டிருப்பாராம்.

மேலும் லதா மங்கேஷ்கர் சிவாஜியின் மனைவி கமலாவை ‘அண்ணி’ என்றுதான் அழைப்பாராம். ஆனால், அவரோ லதாவை, ‘லதா’ என்று அழைப்பது கிடையாது. எப்போதும் சாந்தமும் சிரிப்பும் குடிகொண்டிருக்கும் லதாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கலைவாணியின் நினைவுதான் வரும் என்பதனால் அவரை ‘சரஸ்வதி’ என்றே அழைப்பாராம்.

மேலும் உங்களுக்காக...