அப்பவே தலயால அடிச்சுச் சொன்ன எஸ்.பி.முத்துராமன்.. இருந்தும் கேட்காமல் உயிரை விட்ட சுருளிராஜன்..

Published:

காமெடியா, குணச்சித்திர வேடமா இவருதான் சரியான ஆள் என்று நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் சுருளிராஜன். நாகேஷூக்கு அடுத்து நகைச்சுவை நடிகர் இடம் வெற்றிடமாக இருந்ததை நிரப்பியவர். சில ஆண்டுகளே தமிழ் சினிமாவில் நீடித்தாலும் மாந்தோப்புக் கிளியே ‘கஞ்சன்‘, மீனவன் போன்ற மறக்க முடியாத பல கதாபாத்திரங்களை தமிழ்சினிமாவிற்கு அளித்தவர்.

இவரைப் பற்றி இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தனது நூலில் போது, “ ரஜினியின் பிளாஸ் பஸ்டர் திரைப்படமான முரட்டுக்காளை படத்தில் வில்லன் ஜெய்சங்கருக்கு உதவியாளராக சுருளிராஜன் நடித்தார். படத்தில் ஜெய்சங்கருடைய பரம்பரையின் மேல் உள்ள கோபத்தால், பழி வாங்கும் எண்ணத்தோடு ஜெய் கூடவே இருந்து அவருக்கு குழி தோண்டுவார் சுருளிராஜன். இது படம் பார்க்கும் மக்களுக்குத் தெரியும். ஆனால் ஜெய்க்குத் தெரியாது. அப்படி காட்சியை அமைத்ததால் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்தன. சுருளியின் நடிப்பில் சுறுசுறுப்பும் காட்ட முடிந்தது.

அதெப்படி திமிங்கலம்..? இந்த வரி செட் ஆகும்.. பாட்டில் குழப்பிய கண்ணதாசன்..இப்படி ஓர் அர்த்தம் இருக்கா?

சுருளிராஜன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. குணச்சித்திர நடிகரும் ஆவார். சின்ன வசனம் பேசுவதில் கூட கைதட்டல் வாங்கிவிடுவார். ‘எட்டுக்குள்ள ஒரு நம்பர் சொல்லு?’ என்று கேட்டால். ‘ஒம்போது’ன்னு அவரது குரலில் சொல்லி கைத் தட்டலை அள்ளி விடுவார். அந்த மாதிரி ‘முரட்டுக் காளை’ படத்தில் ஜெய்க்கு நல்லது செய்ற மாதிரி கெட்டது செய்யும் இடங்களில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

எங்களது கூட்டணியில் பல படங்களில் நடித்தவர் சுருளிராஜன். அதனால் எங்கள் குழுவில் ஒருவராகத் தான் அவர் இருந்தார். எப்படியோ அவரிடம் மது அருந்தும் கெட்டபழக்கம் ஒட்டிக் கொண்டது. எவ்வளவோ நாங்கள் எடுத்துச் சொல்லியும் அவரால் அதை விடவே முடியவில்லை. ஒரு நாள் எங்கள் படப்பிடிப்பிலேயே மயங்கி விழுந்தார். நான் தான் டாக்டர் வீரபத்திரனிடம் கூட்டிக் கொண்டு போனேன்.

‘‘இனி மதுவைத் தொட்டால் மரணம் தான்’’ என்று டாக்டர் எச்சரித்தார். இரண்டு, மூன்று மாதம் சிகிச்சை செய்தோம். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு நல்ல கலைஞனை மது குடித்துவிட்டது.” என்று மனம் உடைந்து அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

மேலும் உங்களுக்காக...