இந்தப் பாட்டுக்கு இத்தனை தடங்கலா? இசையமைப்பாளர் முதல் பாடகி வரை அனைவரையும் அழ வைத்த இனிய கானம்

Published:

இசைக்கு எவ்வளவ சக்தி உள்ளது என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். மாடு பால் கறப்பது, பழங்கள் பழுப்பது, செடிகள் வளர்வது என ஓரறிவு கொண்ட ஜீவன்களுக்குக் கூட ஆற்றுப்படுத்தும் காந்த சக்தியாக இசை உள்ளது. மருந்துகள் இல்லாமல் இசையால் மனதில் மாற்றம் ஏற்பட்டு வியாதிகளைக் கூட குணப்படுத்தும் ஆற்றல் இசைக்கு உண்டு எனக் கூறப்படுகிறது.

அப்பேற்றப்பட்ட இசைக்கு மயங்கி ஒரு யூனிட்டே நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றுள்ளது. இன்றும் கிறிஸ்தவர்களின் லிஸ்ட்டில் முதல் பாடலாக விளங்கும் மாதா உன் கோவிலில் பாடல் உருவான போது நடந்த நிகழ்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அச்சாணி என்ற படத்தில் வாலியின் வைர வரிகளில் இடம்பெற்றுள்ள மாதா உன் கோவில் பாடலுக்கு இளையராஜா இசைமையக்கும் போது முன்னதாக பல தடங்கல்கள் ஏற்பட்டது.

இயேசுவை பெறாமல் பெற்ற தாயாக மேரி மாதா இருந்தது போல இந்தப் படத்தின் கதாநாயகிக்கு காட்சிகள் அமைக்கப்பட்டு, அந்த சூழலில் இந்தப் பாடல் இடம் பெறும்.
அப்போது பிரசாத் ஸ்டுடியோ பிஸியாக இருந்ததால் இளையராஜாவால் காலையில் இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யமுடியவில்லை. எனவே, வேறு ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றனர். ஆனால், அங்கு சில கருவிகள் வேலை செய்யவில்லை. எனவே, மதியம் மீண்டும் பிரசாத் ஸ்டுடியோ வந்து பாடலை ஒலிப்பதிவு செய்தனர்.

அப்படி ஒலிப்பதிவு செய்தபோது, ஸ்டூடியோவில் மியூசிக் கண்டக்டர் என ஒருவர் இருப்பார். அவர் கை அசைவுக்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் இசையை வாசிக்க துவங்குவார்கள். ஆனால், இந்தப் பாடல் இசையில் மயங்கி அவர் கை காட்டவே இல்லை. இசைக் கலைஞர்கள் வாசிக்காததால் இளையராஜா என்ன ஆச்சு என கேட்டபோது ‘டியூனில் என்னை மறந்துவிட்டேன்’ என சொன்னாராம்.

அதன்பின் எல்லாம் சரியாக நடந்துக் கொண்டிருந்தபோது, பாடலை பாடிக்கொண்டிருந்த ஜானகி ‘பிள்ளை பெறாத பெண்மை தாயானது.. அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது’ என்கிற வரிகளை பாடாமல் நிறுத்திவிட்டாராம்.

இப்படி ஒரு பாச மலர்களா? நடிகர் திலகத்தின் வாரிசு பிரபுவுக்காக சம்பளமே வாங்காமல் பாடிய லதா மங்கேஷ்கர்

எல்லோரும் ஜானகியை பார்த்தபோது அவர் தொடர்ந்து பாட முடியாமல் அழுது கொண்டிருந்தாராம். ஜானகியிடம் என்ன ஆச்சு என இளையராஜா கேட்க ‘இந்த இசையும், வரிகளும் என்னை ஏதோ செய்கிறது’ என சொல்லியிருக்கிறார். பின்னர் ஜானகியை ஆசுவாசப்படுத்தி சிறிது நேரம் கழித்தே அந்த பாடலை ஒலிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.

இதனிடையே இந்தப் பாடலை கேட்டுவிட்டு இதே மாதிரி பாடல் எனக்கு வேண்டும் என இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இளையராஜாவிடம் கேட்டு அடம்பிடித்துள்ளார். அப்படி உருவான பாடல்தான் பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற ‘மணி ஓசை கேட்டு எழுந்து’ என்கிற பாடல். இந்த பாடலையும் ஜானகியே பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நான் கடவுள் படத்தில் அம்மா உன் பிள்ளைதான் பாடலும் சாதனா சர்கம் குரலில் இதே மெட்டில் உருவாக்கியிருப்பார் இசைஞானி.

மேலும் உங்களுக்காக...