அமெரிக்க துணை அதிபரின் உறவினர்.. இந்திய அணிக்கு விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை.. யார் இந்த தமிழ் நடிகை..!

Published:

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களின் தூரத்து சொந்தமும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பி டீமில் இடம் பெற்றவருமான நடிகை லட்சுமி பிரியா அவர்களின் இன்னொரு பக்கத்தை தான் தற்போது பார்க்க போகிறோம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த போது ஜோ பைடன் அதிபர் போட்டியாளராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் போட்டியாளராகவும் அறிவிக்கப்பட்ட போது நடிகை லட்சுமி பிரியா சந்திர மௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் துணை அதிபர் போட்டியாளரான கமலா ஹாரிஸ் தனது தூரத்து உறவினர் எனவும், கமலஹாரிஸ் தாத்தாவும் என் கொள்ளு தாத்தாவும் உறவினர்கள் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழில் 13 படங்கள்.. அரசியலில் டெபாசிட் இழப்பு.. நடிகை நக்மாவின் அறியப்படாத தகவல்..!

lakshmi priyaa 4

நடிகை லட்சுமி பிரியா சென்னை சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார். அவர் மாஸ்டர் டிகிரி படித்து முடித்தவுடன் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் ஹெச்.ஆர். அதிகாரியாக பணியாற்றினார். இருப்பினும் அவருக்கு வேறு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

அவர் 10 வயதாக இருக்கும் போது ஜிம்னாஸ்டிக் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். இதனையடுத்து அவர் இந்திய மகளிர் கிரிக்கெட் பி டீமில் இணைந்தார். அவர் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அபாரமாக விளையாடினார்.

lakshmi priyaa 3

இந்த நிலையில் தான் இயக்குனர் மகிழ் திருமேனி அறிமுகம் கிடைத்ததை அடுத்து அவரது இயக்கத்தில் உருவான ‘முன் தினம் பார்த்தேனே’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு கௌரவம், சுட்ட கதை, கள்ளப்படம் ஆகிய படங்களில் நடித்தார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

பின்னர் நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தில் உதவி இயக்குனர் என்ற கேரக்டரில் நடித்தார். அந்த கேரக்டர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்தார். அந்த குறும்படம் இணையதளங்களில் பெரும் பரபரப்பையும், சர்சையும் ஏற்படுத்தியதோடு மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.

lakshmi priyaa 1

இதனை அடுத்து ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகை என்ற தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார்.

மேலும் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற படத்தில் நடித்த அவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘சொப்பன சுந்தரி’ என்ற திரைப்படத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்தார்.

lakshmi priyaa 2

பல கோடி சம்பாதித்த தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஒரு பவுன்சரா? ’ஜெண்டில்மேன்’ உருவான கதை..!

திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். சாந்தி நிலையம், தர்மயுத்தம் போன்ற சீரியல்களில் நடித்த அவர், ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஜீ டிவியில் பிக் பாஸ் போலவே ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

மேலும் உங்களுக்காக...