தமிழில் 13 படங்கள்.. அரசியலில் டெபாசிட் இழப்பு.. நடிகை நக்மாவின் அறியப்படாத தகவல்..!

Published:

தமிழில் 13 படங்களும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிகளில் பல படங்களும் நடித்த நடிகை நக்மாவின் அறியப்படாத பக்கங்களை பார்ப்போம்.

நடிகை நக்மா மும்பையை சேர்ந்தவர். இவரது தாயார் முஸ்லிம் மதத்தையும் தந்தையார் இந்து மதத்தையும் சேர்ந்தவர். இவரது சகோதரிகளில் ஒருவர்தான் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

nagma1

சிறுவயதிலேயே இவர் பாலிவுட்டில் நடிக்க தொடங்கினார். 16 வயதில் அவர் ஹிந்தியில் பாகி என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக ஷங்கர் இயக்கத்தில் உருவான காதலன் என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்தான் ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நக்மாவுக்கு அதிக வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் அவர் கதையை கேட்டு ஒரு சில குறிப்பிட்ட வாய்ப்புகளை மட்டுமே தேர்வு செய்தார்.

சத்யராஜ் உடன் வில்லாதி வில்லன், பிரபுதேவாவுடன் லவ் பேர்ட்ஸ், கார்த்திக் உடன் மேட்டுக்குடி, பிரபுவுடன் பெரிய தம்பி, சரத்குமார் உடன் அரவிந்தன், ஜானகிராமன் மற்றும் ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாக்யராஜுடன் வேட்டிய மடிச்சு கட்டு என்ற படத்தில் நடித்தார்.

பல கோடி சம்பாதித்த தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஒரு பவுன்சரா? ’ஜெண்டில்மேன்’ உருவான கதை..!

nagma2

மேலும் அஜித் நடித்த தீனா மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நக்மா நடித்திருப்பார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் போஜ்புரி மொழியில் இவர் அதிக படங்கள் நடித்துள்ளார். அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது போஜ்புரி மொழியில் நடித்ததால் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமாவை அடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நக்மா, அதே ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு திடீரென மாறினார். 2014ஆம் ஆண்டு மீரட் தொகுதியில் அவர் போட்டியிட்ட நிலையில் நான்காவது இடத்தையே பெற்று தனது டெபாசிட்டை இழந்தார்.

nagma

கவுண்டமணியை ஓரங்கட்ட கமல், ரஜினி கொண்டு வந்த காமெடி நடிகர்.. இப்போது அமெரிக்காவில் செட்டில்..!

தற்போது அவர் அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். நடிகை நக்மா கடைசி வரை திருமணம் செய்யாமல் இருந்தார். திருமணத்தில் அவருக்கு நாட்டம் இல்லை என்றும் கூறப்பட்டது.

மேலும் உங்களுக்காக...