கண்ணதாசன் மகன் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? சம்பள பாக்கி வைத்த நிறுவனம்!

Published:

கவியரசு கண்ணதாசனுக்கு 3 மனைவிகள் மற்றும் 15 குழந்தைகள் என்பதும் அவர்களில் ஒருவர் விஜய் நடித்த ’கத்தி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் பலரும் அறியாத தகவலாகும்.

கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு பொன்னழகி, பார்வதி மற்றும் வள்ளியம்மை ஆகிய மூன்று மனைவிகள் இருந்தனர். பொன்னழகிக்கு ஏழு குழந்தைகள், பார்வதிக்கு ஏழு குழந்தைகள் மற்றும் வள்ளியம்மைக்கு ஒரு குழந்தை என மொத்தம் கண்ணதாசனுக்கு 15 குழந்தைகள் உண்டு. அவர்களில் ஒருவர் தான் கோபி கண்ணதாசன்.

கவியரசு கண்ணதாசன் தயாரித்த ஐந்து திரைப்படங்கள்.. ஒரே ஒரு படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்..!

தமிழ் சினிமாவில் இவர் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கேரக்டரில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தில் அவருக்கு தந்தையாக நடித்தவர் தான் கோபி கண்ணதாசன். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி என்ற திரைப்படத்தில் நீதிபதி கேரக்டரில் நடித்திருப்பார், இவரைத்தான் விஜய் மிரட்டுவார்.

gopi kannadasan3 1

இந்த நிலையில் கத்தி திரைப்படத்தில் நடித்த போதுதான் அவருக்கு பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை என்றும் பாதி சம்பளம் தான் கொடுத்தார்கள் என்றும் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். லைகா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு படமான இந்த படத்தில் நீதிபதியாக நடித்திருந்த நிலையில் சம்பள பாக்கி கொடுக்கவில்லை எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் கத்தி படத்தில் நடித்த அனைவருக்குமான சம்பளத்தை புரடொக்சன் நிர்வாகியிடம் கொடுத்து விட்டதாகவும், நிர்வாகி ஏமாற்றிவிட்டால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் லைகா நிறுவனம் தயாரித்த அடுத்த திரைப்படமான ராங்கி என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டானபோது தன்னுடைய முந்தைய படத்தின் சம்பள பாக்கி கொடுத்தால்தான் இந்த படத்தில் நடிப்பேன் என்று கூறியதாகவும் அதன் பிறகு அவருக்கு சம்பளம் செட்டில் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் கோபி கண்ணதாசன் நடிக்க இருந்ததாகவும், ஆனால் ஒரு சிலர் சதி செய்து தன்னை மாஸ்டர் படத்தில் நடிக்க விடாமல் செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ராங்கி படத்தின் படப்பிடிப்பு இருந்த நாளில் வேண்டுமென்றே மாஸ்டர் படத்தின் இவரது காட்சியை வைத்ததால் இவர் ஏதாவது ஒரு படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மாஸ்டர் படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு ராங்கி படத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

gopi kannadasan

கண்ணதாசன் மகனான எனக்கே இந்த நிலைமை என்றால் சினிமா கனவோடு வரும் மற்ற இளைஞர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று வேதனையுடன் அவர் பேட்டி அளித்திருந்தார்.

மேலும் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘என்ஜிகே’ என்ற திரைப்படத்திலும், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக நோட்டா படத்தில் டிஜிபியாக வந்து நடிப்பில் மிரட்டி இருப்பார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும், ஆனால் தனக்கு நடிப்பு வரவில்லை என்று தன்னை வெற்றிமாறன் அனுப்பி விட்டதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். படப்பிடிப்புக்கு தன்னை வர சொன்ன வெற்றிமாறன் அரைப்பக்க வசனத்தை கொடுத்து நடிக்க சொன்னதாகவும், கஷ்டப்பட்டு அந்த வசனங்களை மனப்பாடம் செய்து நடித்தபோது இந்த கேரக்டருக்கு இவர் வேண்டாம் அனுப்பிவிடுங்கள் என்று வெற்றிமாறன் சொல்லிவிட்டதாகவும், அதன் பிறகு ஒரு சிறிய தொகை மட்டும் எனக்கு கொடுத்து அனுப்பி அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு கோபி கண்ணதாசன் பேட்டி அளித்திருந்தார்.

அதேபோல் பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் என்ற திரைப்படத்தில் நடிக்க கோபி கண்ணதாசன் ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தரும்போது பாலாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நீங்கள் நன்றாக தமிழ் பேசுவீர்களா?’ என்று பாலா கேட்டாராம். அப்போது அவர், ‘சார் நான் கண்ணதாசன் மகன் என்று சொல்ல பாலா ஆச்சரியமடைந்து அப்படியா’ என்று அவரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியுள்ளார்.

பாலா எப்போதுமே ஒரு விஷயத்தை கேட்டு ஆச்சரியப்பட மாட்டார் என்றும் ஆனால் முதல் முறையாக தான் கண்ணதாசன் மகன் என்று கூறியதும் ஆச்சரியப்பட்டார் என்றும், அந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்தார் என்றும் கூறியுள்ளார்.

தடைகளை தகர்த்து சாதனை செய்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’: எம்ஜிஆரின் அரசியலுக்கு அடித்தளம்..!

‘விக்ரம் வேதா’, அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ உள்ளிட்ட படங்களில் நடித்த கோபி கண்ணதாசன் இன்றும் தனக்கு உரிய வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...