காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!

காதல் பாடல் என்றாலே அந்த பாடலில் காதல் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஆனால் கவியரசு கண்ணதாசன் காதல் என்ற வார்த்தை இல்லாமல் ஒரு காதல் பாடல் எழுதியிருக்கிறார் என்றால் அதுதான் அவரை கவியரசு என்ற போற்ற வைக்கிறது.

’பாவ மன்னிப்பு’ என்ற படத்திற்காக ஒரு காதல் பாடல் வேண்டும் என்று இயக்குனர் பீம்சிங் தெரிவித்திருந்தார். இந்த பாடல் அனைத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த நிலையில், அந்த பாடலுக்கு டியூன் போட்ட எம்எஸ் விஸ்வநாதன், காதல் என்ற வார்த்தை இல்லாமல் எனக்கு ஒரு காதல் பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் கோரிக்கை வைத்தார்.

சிவாஜி படத்தை இயக்கியவர்.. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.. நடிகை விஜய நிர்மலாவின் சாதனை..!

கவியரசு கண்ணதாசன் ஒரு சில வினாடிகள் மட்டுமே யோசித்தபோது அவருக்கு  உடனே பகவத் கீதையில் உள்ள மாதங்களில் அவள் மார்கழி எழுதிய வரி ஞாபகத்திற்கு வந்தது. உடனே அதை மனதில் வைத்து காதலையும், காதலியையும் உவமை படுத்தி ஒரு பாடலை எழுதினார். இதுதான் ’காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல். அந்த பாடல் இதோ:

song

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப் புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை

இந்த பாடலில் இடம் பெற்றுள்ள  வசந்தம், ஓவியம், மார்கழி, மல்லிகை, மணிப்புறா, தாலாட்டு, மாங்கனி, தென்றல் ஆகியவை காதலையும் காதலியையும் குறிக்கும் என்றாலும்  ஒரு வார்த்தை கூட இந்த பாடலில் காதல் என்ற சொல் இருக்காது.

12 வயதில் நடிப்பு.. கல்லூரி தாளாளருடன் திருமணம்.. ஒய் விஜயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள்..!

இந்த நிலையில்தான் எம்ஜிஆர் அவர்கள் ’உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி கொண்டிருந்தபோது ’காலங்களில் அவள் வசந்தம்’ பாடல் போலவே எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்றும்  நவரசம் சொட்டும் வகையில் காதல் அந்த பாடலில் இருக்க வேண்டும், ஆனால் காதல் என்ற வார்த்தை வரக்கூடாது என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்காக எழுதிய பாடல் தான் ’அவள் ஒரு நவரச நாயகன்’.  இந்த பாடலிலும் காதல் மற்றும் காதலியை உவமைப்படுத்த கண்ணதாசன் காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் இதோ.

ulagam sutrum valiban

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்

மரகத மலர்விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்

குறுநகை கோலத்தில் தாமரை
கோடை காலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்

அருசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னைத் தந்தேன் காணிக்கை

தமிழில் முதல்முறையாக ஒரு கல்லூரி கதை.. ஒரு தலை ராகம் படத்தின் வெற்றிக்கதை..!

மேற்கண்ட இரண்டு பாடல்களுமே கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் விரும்பி கேட்ட பாடலாக இருந்தது. இந்த பாடல்களை ஆழ்ந்து கேட்டால் இன்றளவும் இதில் இருக்கும் உவமை ஆச்சரியத்தை வரவழைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews