மிதுனம் ஆவணி மாத ராசி பலன் 2023!

Published:

மிதுன ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் காண்பீர்கள். புதன் பகவான் சிம்மராசியில் வக்ரநிலையில் உள்ளார்; தொழில்ரீதியாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை கிடைக்காத வேலை உங்களுக்குக் கிடைக்கப் பெறும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின் ஆதரவு, அனுசரணை அதிகரித்துக் காணப்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்பத்தில் தன வரவு அதிகரிக்கும்; வீண் விரயச் செலவுகளைச் செய்யாமல் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இடம் விற்பது, வாங்குவது போன்ற விஷயங்கள் லாபம் தருவதாய் அமையும்.

தாயின் உடல் நலனில் அக்கறை தேவை; உயர் மருத்துவரீதியாக செலவினங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு மேற்படிப்பு ரீதியாக நினைத்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியத்துக்கு காத்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். 6 ஆம் இடத்து அதிபதி 4 ஆம் இடத்தில் இருப்பதால் தேக ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.

குரு பகவான் தனுசுவைப் பார்ப்பதால் திருமண காரியங்களில் இருந்த தடைகள் விலகி விறுவிறுவென திருமண நிச்சயதார்த்தம், பத்திரிக்கை அடித்தல், திருமண தேதி குறித்தல் என்று அனைத்து காரியங்களும் விறுவிறுவென நடந்தேறும்.

இளைய உடன் பிறப்புகளின் உதவிகள் கிடைக்கப் பெறும், கணவன்- மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள்.

மேலும் உங்களுக்காக...