கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் ஹீரோ.. சூப்பர்ஹிட்டான ஆச்சரியம்..!

Published:

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பல திரைப்படங்களில் அவரே நடித்து உள்ளார் என்பது தெரிந்ததே. தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயன், சிம்பு நடிப்பில் உருவாகும் படங்களை தயாரித்து வருகிறது. ஆனால் ஆரம்ப கட்டங்களில் முதல் முதலாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தில் வேறொரு ஹீரோவாக நடித்தார். அவர்தான் சத்யராஜ். அந்த படம் தான் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’.

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த இந்த படம் 1987ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு சிறு காட்சியில் மட்டும் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

இந்த படம் மம்முட்டி நடித்த மலையாள படம் ஒன்றின் ரீமேக். மம்முட்டியின் திரைப்படத்தை கமல்ஹாசன், சத்யராஜ், சந்தான பாரதி ஆகிய மூவரும் பார்த்தனர். இந்த படத்தை பார்த்தவுடன் கமல்ஹாசன் இந்த படத்தின் ரீமேக்கில் நீங்கள் தான் நடிக்க போகிறீர்கள் என்று கூறியதும் சத்யராஜ் ஆச்சரியம் அடைந்தார். நடிப்பில் ஸ்கோர் செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ள திரைப்படம், எனவே நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சத்யராஜ் சொல்ல, இல்லை நீங்கள் தான் நாயகன், எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்க, உங்களிடம் நான் பேரம் பேச மாட்டேன் நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் ஓகே என்று கூறினார்.

kadamai kanniyam kattupaadu 1

சந்தான பாரதி தான் இயக்குனர் என்பது முடிவானது. இந்த படத்தின் படப்பிடிப்பில் முதல் நாளன்று மட்டுமே கமல்ஹாசன் வந்தார், அதன் பிறகு அவர் படப்பிடிப்பு தளத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லை.

சந்தான பாரதி மீது அவர் முழு நம்பிக்கை வைத்திருந்ததால் கமலஹாசன் தயாரிப்பு பணியை மட்டுமே இந்த படத்தில் மேற்கொண்டார். இந்த படத்தில் மூன்று பெண் கேரக்டர்கள் வரும். சத்யராஜை ஓடி ஓடி காதலிக்கும் ஜீவிதா கேரக்டர், தனது தம்பியை கொன்ற வில்லனை பழிவாங்க வேண்டும் என்று துடிக்கும் நளினி கேரக்டர் மற்றும் விபச்சார வேடத்தில் நடித்த கீதா கேரக்டர்.

இந்த மூவரில் கீதா தான் படத்தில் ஸ்கோர் செய்வார் என்பதும் விபச்சார வேடம் என்றால் கிளாமராக காண்பிக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை உடைத்து குணச்சித்திர கேரக்டர் போல் நடித்திருப்பார். இவருக்கும் சத்யராஜுக்கும் இடையே உள்ள அந்த நட்பு மிகவும் நாகரீகமான காட்சிகளில் காண்பிக்கப்பட்டு இருக்கும்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

ஒரு அப்பாவி குடும்பத்தை வீட்டுக்குள் சிறை வைத்து, வில்லன் குடும்பம் தான் நினைத்ததை சாதிக்க முயற்சி செய்யும்போது சத்யராஜ் அதில் புகுந்து அந்த குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

kadamai kanniyam kattupaadu1

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இந்த படம் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த படம். சிவாஜி கணேசன் நடித்த ‘அந்த நாள்’ படத்திற்குப் பிறகு பாடல்கள் இல்லாமல் வெளிவந்த படம் என்ற பெருமையும் இந்த படத்திற்கு கிடைத்தது.

இந்த படத்திற்கு விமர்சனம் எழுதியவர்கள் ஒரு சில இடங்களில் பாடல்கள் வைத்திருக்கலாம் என்று கூறினர். ஆனால் இந்த படத்தின் கதை ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் பாடல்கள் இந்த படத்திற்கு தடையாக இருக்கும் என்று கமல்ஹாசன், சந்தான பாரதி ஆகிய இருவருமே சேர்ந்து முடிவெடுத்தனர். அதேபோல் படம் பார்க்கும்போது பாடல்கள் இல்லை என்ற குறையும் இருக்காது.

இந்த படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுதியதை அடுத்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒரு தயாரிப்பாளராக கமல்ஹாசனுக்கு இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.

வசனமும் இல்லை, பாடலும் இல்லை.. கமல்ஹாசனின் ஒரு வித்தியாசமான முயற்சி..!

இந்த படத்தின் வெற்றி விழாவில் சிவாஜி கணேசன் கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் உங்களுக்காக...