நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கி உள்ளாரா? அதில் ஒன்று கமல் படம்..!

நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பதும் பெரும்பாலானவை குணச்சித்திர வேடங்கள் என்பதும் தெரிந்ததே. ஆனால் அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார் என்பதும் தயாரித்தும் உள்ளார் என்பதும் பலரும் அறியாத தகவல். அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

கடந்த 1962ஆம் ஆண்டு டி.எம்.சௌந்தரராஜன் நடித்த ‘பட்டினத்தார்’ என்ற திரைப்படத்தில்தான் நடிகராக மேஜர் சுந்தரராஜன் அறிமுகமானார். அதன் பிறகு கே.பாலசந்தர் இயக்கிய பல படங்களில் அவர் நடித்தார். கே.பாலசந்தர் படங்களில் தொடர்ந்து முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

கவியரசு கண்ணதாசன் தயாரித்த ஐந்து திரைப்படங்கள்.. ஒரே ஒரு படத்தால் ஏற்பட்ட பெரும் நஷ்டம்..!

மேஜர் சுந்தரராஜன் ஆறு படங்களை இயக்கி உள்ளார் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாத தகவலாகும். சிவாஜி கணேசனும் மேஜர் சுந்தர்ராஜனும் நெருங்கிய நண்பர்கள். பல ஆண்டுகள் காலமாக இருவரும் நண்பர்களாக இருந்தார்கள்.

major sundharrajan

சிவாஜி கணேசன் ஏற்ற இறக்கத்தின் போது உறுதுணையாக இருந்த நடிகர்கள் இரண்டு பேர்தான். அவர்களில் ஒருவர் மேஜர் சுந்தரராஜன், இரண்டாவது நபர் வி.கே.ராமசாமி. சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்தபோதுகூட இவர்கள் இருவரும் அவருடைய கட்சியில் இருந்தனர்.

மேஜர் சுந்தர்ராஜன் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். அவர் இயக்கிய முதல் திரைப்படம் சிவாஜி கணேசன் நடித்த ‘கல்தூண்’ என்ற படம். தொழிலதிபர் எஸ்.எஸ்.கருப்பசாமி என்பவர் தயாரிப்பில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.

தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் மகன் ஒரு கட்டத்தில் தன்னையே எதிர்க்க துணிந்த பிறகு தந்தை அதிர்ச்சி அடைவார். இதனை அடுத்து மகனுக்காகவே கடைசியில் உயிர் இழப்பது போன்ற ஒரு கதை அம்சம் கொண்ட படம் தான் கல்தூண். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

எஸ்பி முத்துராமன் தான் இயக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதா.. டான்ஸ் மாஸ்டராக கமல்ஹாசன்.. என்ன படம் தெரியுமா?

இதனையடுத்து அடுத்த ஆண்டு ‘ஊரும் உறவும்’ என்ற படத்தை மேஜர் சுந்தரராஜன் இயக்கினார். இதுவும் சிவாஜி கணேசன் நடித்த படம் தான். ஆனால் இந்த படம் கிட்டத்தட்ட கல்தூண் கதை போலவே இருந்ததாக கூறப்பட்டது. கல்தூண் படத்தில் மகன் என்றால் இந்த படத்தில் தம்பி கேரக்டர் என்ற மாற்றம் மட்டும் இருந்ததால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

major sundharrajan2

இதனையடுத்து வித்தியாசமாக ஒரு த்ரில் கதை அம்சம் கொண்ட படத்தை மேஜர் சுந்தரராஜன் இயக்கினார். அதுதான் ‘நெஞ்சங்கள்’. இந்த படத்தில் ஒரு குழந்தையை வில்லன் குரூப் கடத்திவிடும். அந்த குழந்தையை சிவாஜி கணேசன் எப்படி மீட்டார் என்பது தான் கதையாக இருக்கும். இந்த படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமானார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதன் பிறகு சிவக்குமார் நடித்த ‘இன்று நீ நாளை நான்’ என்ற படத்தை மேஜர் சுந்தரராஜன் இயக்கினார். இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதனையடுத்து ‘அம்மா இருக்கா’ என்ற படத்தை இயக்கிய மேஜர் சுந்தரராஜன், கமல்ஹாசன் நடித்த ‘அந்த ஒரு நிமிடம்’ என்ற படத்தை இயக்கினார். கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் மேஜர் சுந்தரராஜன் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

கமல்ஹாசன், ஊர்வசி நடிப்பில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. மேஜர் சுந்தரராஜனுக்கு பேர் சொல்லும் படமாகவும் அமைந்தது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு மேஜர் சுந்தராஜன் நடிப்பதில் தொடர்ந்து பிசியானதால் படங்களை இயக்கவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...