வசனமும் இல்லை, பாடலும் இல்லை.. கமல்ஹாசனின் ஒரு வித்தியாசமான முயற்சி..!

ஒரு திரைப்படம் என்றால் அதில் பாடல்கள் இருக்க வேண்டும், வசனம் இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படையான நியதியாக இருந்தது. ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் என்றால் அந்த படம் தான் ‘பேசும் படம்’.

டைட்டிலை பேசும் படம் என்று வைத்துவிட்டு படத்தின் உள்ளே ஒரு வசனம் கூட இல்லாமல் வைத்தது தான் கமல்ஹாசனின் சிறப்பு. வசனம் இல்லாத படம் என்பதால் உலகில் உள்ள அனைத்து விதமான மொழி பேசுபவர்களும் இந்த படத்தை பார்க்கும் அளவுக்கு இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் திட்டம்.

ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட கமல்ஹாசன் படம்.. இப்படி ஒரு திகில் படம் இனி வருமா?

pesum padam2

கமல்ஹாசன் தனது ஆஸ்தான இயக்குனரான சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்களுடன் இணைந்து எடுத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தில் வசனம் இல்லையே என்ற குறையே இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.

காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என பல்வேறு அம்சங்கள் இந்த படத்தில் இருந்தது. இந்த படம் வசூலில் நல்ல சாதனை செய்தது. சினிமா தோன்றிய காலத்தில் வசனம் இல்லாமல் தான் படம் எடுக்கப்பட்டது. பெரும்பாலான சார்லி சாப்ளின் படங்கள் வசனம் இல்லாமல் தான் இருக்கும். அதன் பிறகு தான் சைலன்ட் மூவி மறைந்து பேசும் படங்கள் வந்தன. ஆனால் பேசும் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தான் பேசாத படம் என்ற பேசும் படத்தை கமல்ஹாசன் உருவாக்கி இருந்தார்.

வேலையில்லாத கமல்ஹாசன் ஒவ்வொரு நாளையும் போராட்டமாக கழித்து கொண்டிருக்கும் நிலையில்தான் தொழிலதிபர் ஒருவர் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கியிருப்பார். அந்த அறையில் கமல்ஹாசனுக்கு தங்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

pesum padam1

அதே ஹோட்டலில் மேஜிக்மேன் மற்றும் அவரது மகள் அமலா தங்கி இருப்பார்கள். கமல் ஒரு பணக்காரர் என்று நினைத்து அமலா அவருடன் பழகுவார், காதலிக்கவும் செய்வார். இந்த நிலையில் அந்த அறையில் தங்கி இருக்கும் பணக்காரனை கொல்ல அவருடைய தம்பி ஒரு கொலையாளியை அனுப்பி இருப்பார். அவர் கமல்ஹாசன் தான் கொல்லப்பட வேண்டியவர் என்று நினைத்து கமல்ஹாசனை கொல்வதற்காக முயற்சி செய்வார். அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வி அடையும்.

உண்மையான பணக்காரர் வேறு ஒரு இடத்தில் இருக்க கமல்ஹாசனை அந்த கொலைகாரன் சுற்றி சுற்றி வருவார். கமல்ஹாசன் தற்செயலாக காப்பாற்றப்பட்டு கொண்டும் இருப்பார். இறுதியில் அந்த பணக்காரர் என்ன ஆனார்? கமல் – அமலா காதல் என்ன ஆனது? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

கமல்ஹாசன், பிரதாப் போத்தன், டினு ஆனந்த், அமலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். வைத்தியநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் பின்னணி இசை மட்டுமே சிறப்பாக அமைய வேண்டும் என்று பார்த்து பார்த்து இந்த படத்திற்கு இசையமைக்கப்பட்டது.

pesum padam

இந்த படம் வெளியான காலத்தில் கர்நாடக மாநிலத்தில் கன்னட படம் மட்டுமே திரையிட வேண்டும் என்றும் மற்ற மொழி படங்களை ரீமேக் செய்து திரையிடக்கூடாது என்றும் நிபந்தனை இருந்தது. எனவே இதை கன்னட படம் என்று காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே கமல்ஹாசன் இந்த படத்திற்கு ‘புஷ்பக விமானம்’ என்று கன்னடத்தில் டைட்டில் வைத்திருந்தார்.

இந்த படத்திற்கு ரீமேக் அல்லது டப்பிங் தேவை இல்லை என்பதால் எந்த மொழியில் வேண்டுமானாலும் இந்த படத்தை பார்க்கலாம். வசனம் இல்லாத காரணத்தினால் இந்த படம் இந்தியா முழுவதும் வெளியானது. உலகின் பல நாடுகளில் வெளியானது. அனைத்து பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடியது.

20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!

கமல் – சிங்கீதம் சீனிவாச ராவ் சேர்ந்தாலே அந்த படம் வெற்றி அடையும் என்று அந்த காலத்தில் இருந்த நிலையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடந்த 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பினருக்கும் பெரும் லாபத்தை கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...