பொதுவாக கே.பாக்யராஜ் இயக்கி நடிக்கும் திரைப்படம் என்றாலே அவரது திரைப்படத்தில் வசனம் தான் முக்கியத்துவம் பெறும். ஆனால் அவர் ‘ஒரு கை ஓசை’ என்ற திரைப்படத்தில் முழுக்க முழுக்க வசனமே பேசாமல் நடித்துள்ளார்.
கடந்த 1980 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் ’ஒரு கை ஓசை. கே.பாக்யராஜ் சிறுவயதாக இருக்கும் போது அவரது தாயார் அவரது கண் முன்னே ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்து விடுவார். அந்த அதிர்ச்சியில் பாக்யராஜுக்கு குரல் போய்விடும்.
ரஜினியின் ‘ஜானி’: இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!
இதனை அடுத்து அவர் ஊமையாகவே அந்த கிராமத்தில் சுற்றி திரிவார். இந்த நிலையில்தான் அந்த கிராமத்திற்கு ஒரு பெண் டாக்டர் வருவார். ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்த பாக்யராஜ் தற்கொலைக்கு முயற்சி செய்வார். ஆனால் அவரது தற்கொலை முயற்சி அனைத்துமே தோல்வியில் முடியும்.
ஆரம்பத்தில் அவரது தற்கொலை முயற்சியை சீரியஸாக எடுத்து கொண்ட அந்த பெண் டாக்டர் அவரை காப்பாற்ற முயற்சி செய்வார். அதனை அடுத்து தற்கொலை செய்வதற்கு கூட லாயக்கில்லை என்றும் காமெடி பீஸ் என்றும் புரிந்து கொள்வார்.
இந்த நிலையில் தான் பாக்யராஜ்க்கு அந்த பெண் டாக்டர் மீது படிப்படியாக காதல் உண்டாகும். ஒரு கட்டத்தில் அவர் தனது காதலை சொல்ல முயற்சிக்கும் போதுதான் தனக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருந்தார் என்றும் அந்த காதலுக்கு உதாரணமாக ஒரு குழந்தை உள்ளது என்றும் தனது காதலர் ரயில் விபத்தில் இறந்துவிட்டார் என்றும் கூறுவார். அப்போது பாகியராஜ் அதிர்ச்சி அடைவது தான் இந்த படத்தின் இடைவேளை.
இதனை அடுத்து இரண்டாம் பாதியில் டாக்டரின் குழந்தையும், டாக்டரின் சகோதரரும் கிராமத்திற்கு வருவார்கள். இந்த நிலையில் பாக்கியராஜின் முறைப்பெண் ஒருதலையாக காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்வார். ஆனால் அவருக்கு டாக்டர் மேல் காதல் என்றவுடன் ஒரு கட்டத்தில் ஒதுங்கிக்கொள்வார்.
இந்த நிலையில் தான் டாக்டரின் தம்பி தனது அக்காவை பார்க்க வரும்போது அவரை பாக்யராஜின் முறைப்பெண் காதலிப்பார். ஒரு கட்டத்தில் கே.பாக்யராஜ்க்கு சிகிச்சை செய்யும் டாக்டர் அவருக்கு பேச வைக்கும் முயற்சியை செய்வார். அவருக்கு பேச்சும் வந்துவிடும். ஆனால் கிளைமாக்ஸில் ஏற்படும் ஒரு திருப்பத்தால் தனக்கு பேசும் திறமை கிடைத்தும் அவர் பேசாமலே இருந்து விடுவார். அதற்கான காரணம் என்ன என்பது தான் படத்தின் ட்விஸ்ட்.
கே.பாக்யராஜ் இந்த படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் முழுக்க முழுக்க சைகையின் அடிப்படையில் நடித்திருப்பார். அதேபோல் இந்த படத்தில் டாக்டராக நடித்திருந்தார் அஸ்வினி. மிகவும் அபாரமாக நடித்திருப்பார். மேலும் சிறிது நேரமே வந்தாலும் சங்கிலி முருகன் மிக சிறப்பாக நடித்திருப்பார்.
தமிழில் ஒருசில படங்கள் தான்.. அதன்பின் தமிழக அமைச்சரின் மருமகள் ஆன நடிகை..!
1980ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்யராஜின் நடிப்புக்காகவே இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.