தமிழில் ஒருசில படங்கள் தான்.. அதன்பின் தமிழக அமைச்சரின் மருமகள் ஆன நடிகை..!

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை ஒருவர் தமிழக அமைச்சர் ஒருவரின் மருமகளாகி திரை உலகில் இருந்து விலகி குடும்ப பெண்ணாக மாறினார். அவர்தான் நடிகை ஸ்ரீஜா.

srijaa3

கேரளாவை சேர்ந்த நடிகை ஸ்ரீஜாவின் குடும்பமே ஒரு கலை குடும்பம். இதனை அடுத்து அவருக்கு நடிப்பு என்பது ரத்தத்திலே ஊறி உள்ளதால் சிறு வயதிலேயே அவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்த பல மலையாள இயக்குனர்கள் அவரை குழந்தை நட்சத்திரமாக ஒப்பந்தம் செய்தார்கள். சிறுவயதிலேயே அவர் கிட்டத்தட்ட 15 படங்கள் நடித்திருந்தார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

இதனை அடுத்து ஒரு சில மலையாள படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நிலையில்தான் தமிழில் மம்முட்டி நடித்த ’மௌனம் சம்மதம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அவருக்கு அந்த படத்தில் விஜயலட்சுமி என்ற அருமையான கேரக்டர் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ் ரசிகர்களையும் அவர் கவர்ந்தார்.

srijaa1 1

இதனை அடுத்து சேரன் பாண்டியன் என்ற படத்தில் ஆனந்த் பாபு ஜோடியாக நடித்த அவர் ’எம்ஜிஆர் நகரில்’, ’தையல்காரன்’, ’முதல் குரல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். முதல் குரல் திரைப்படம் சிவாஜி கணேசன், அர்ஜுன் நடித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் அவர் கடந்த 1994ஆம் ஆண்டு ’செவ்வந்தி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். பிஎஸ் நிவாஸ் என்பவரது இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சந்தான பாண்டியன் என்பவர் நாயகனாக நடித்திருப்பார். இந்த படத்தில் இசைஞானி இளையராஜாவின் மிக அருமையான பாடல்கள் குறிப்பாக ’செம்மீனே செம்மீனே’ என்ற பாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…! நடிகை ஜெயப்பிரதாவின் உன்னத நடிப்புக்கு இந்த ஒரு படமே போதும்…!

srijaa

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நாயகன் சந்தான பாண்டியனுடன் ஸ்ரீஜாவுக்கு காதல் ஏற்பட்டது. இதனை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1993ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சந்தான பாண்டியனின் தந்தை செ.அரங்கநாயகம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்.

மழலைப் பட்டாளம்: நடிகை லட்சுமி இயக்கிய ஒரே படம்.. உதவிய பாலசந்தர்-விசு..!

திருமணத்திற்கு பிறகு ஸ்ரீஜா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த காரணத்தினால் ‘என் ராஜாங்கம்’ என்ற படத்தில் மட்டும் முடித்துக் கொடுத்தார். அதன் பிறகு அவர் திரையுலகில் இருந்து விலகி அமைச்சரின் மருமகளாக குடும்ப பெண்ணாகவே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews