கத்ரீனா கைஃப், விஜய் சேதுபதி இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் குறித்த கலக்கல் அப்டேட்!

Published:

தமிழ் சினிமாவின் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜய்சேதுபதி. சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லனாக நடித்து தெறி ஹிட் கொடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் வில்லனாகவும் மற்றும் பல மொழிகளில் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இந்தியில் ஷாரூக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக களமிறங்கி மாஸ் காட்டி வருகிறார்.

அதை தொடர்ந்து ஹிந்தியில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரஜினியின் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? மாஸ் அப்டேட் இதோ!

மெர்ரி கிறிஸ்மஸ் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. மேலும் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதியை முதல் முறையாக திரையில் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முதலில் படத்தை டிசம்பர் 2022 இல் வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படம் 2023 டிசம்பர் 15ஆம் தேதி ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.

 

மேலும் உங்களுக்காக...