ஜோதிகாவிடமே இப்படி கேட்கலாமா!.. சூர்யா ரசிகையால் கடுப்பான ஜோ என்ன சொன்னாரு தெரியுமா?

Published:

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் விலகியிருந்த நிலையில் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தமிழில் நினைத்த அளவிற்கு வாய்ப்பு அமையாததால் மலையாளம், இந்தி படங்களில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சூர்யாவை ஒரு நாள் எனக்கு தருவீங்களா என ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு கூலாக பதிலளித்துள்ளார் ஜோதிகா.

சூர்யாவை பங்கு போட முடியாது:

ஜோதிகா தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். 1997ம் ஆண்டு டோலி சாஜா கே ரக்னா என்ற இந்தி படத்தில் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் வாலி, தெலுங்கில் தாகூர் உள்ளிட்ட படங்கள் ஜோதிகாவின் முதல் படமாகும். அதை தொடர்ந்து எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த அவருக்கு தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. மேலும் டும் டும் டும், காக்க காக்க, சந்திரமுகி, மொழி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஜோதிகா கொஞ்சம் ஓவர் அக்டிங் செய்தாலும் அவர் நடிப்புக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருந்த ஜோதிகா பிரபல நடிகரான சூர்யாவை காதலித்து வந்த நிலையில் 2006ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். காக்க காக்க, பேரழகன், சில்லுன்னு ஒரு காதல் போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு மகள் தியா, மகன் தேவ் என இரு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதைதொடர்ந்து நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தும் அனைத்தும் பெரிதாக ஓடவில்லை.

ஜோதிகா தமிழ் மொழியில் தனக்கு சரியான வாய்ப்பு அமையாததால் மலையாளத்தில் மம்மூட்டியின் ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். கேரளாவில் அப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது. அதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் எடுத்தாலும் ரசிகர்கள் அதை வரவேற்பது இல்லை.  ஆனால் மலையாளத்தில் அப்படி இல்லை என சர்ச்சையாக பேசியிருந்தார்.

அடுத்ததாக ஜோதிகா நடிப்பில் டப்பா கார்ட்டெல் என்ற வெப்சீரிஸ் ஓடிடியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் ரசிகை ஒருவர் சில்லுன்னு ஒரு காதல் படம் போல எனக்கும் ஒரு நாள் சூர்யாவை தருவீங்களா என கேட்டதற்கு, ஜோதிகா “Oops not allowed” அப்படியெல்லாம் அனுமதிக்க முடியாது என அந்த ரசிகைக்கு கறாராக பதிலளித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...