கேரளா ஷூட் ஓவர்!.. 5வது நாளில் ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்த விஜய்!.. எவ்ளோ கூட்டம் பாருங்க!..

By Sarath

Published:

நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்காக கேரளாவுக்கு சென்றிருந்தார். அங்கே அவர் ஷூட்டிங்கிற்கு கலந்து கொண்ட 5 நாட்களும் தொடர்ந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரை சந்தித்து சென்றனர்.

தினமும் தனக்காக காத்திருக்கும் மலையாள ரசிகர்களை மாலை நேரத்தில் கேரவன் மீது ஏறி சந்தித்து பேசுவதும், அவர்களை பார்த்து உற்சாகமாகவும் கையசைத்தும் வருகிறார்.

கேரள ரசிகர்களுடன் பேசிய விஜய்:

மகன் விஜய் கெட்டப்பில் நடித்து வரும் விஜய் அதற்காக டயட் இருந்து வருகிறார். ஒரு நாளைக்கு ஒரு ஜூஸ் தான் விஜய் ஆர்டர் செய்ததாக அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய்யின் விக்கு வைத்திருக்கிறார் என சூர்யா ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து ரசிகர்களின் அன்புக்காக அவர் தலை வணங்கி அவர்கள் போடும் மாலைகளை ஏற்றுக் கொண்டு வருகிறார். மக்கள் நாயகனாகவே விஜய் மாறிவிட்டார் என தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கேரளாவில் 5 நாட்கள் கோட் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று மாலை ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் அவர்களுடன் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலேயே வெளியிட்டுள்ளார்.

செல்ஃபி வீடியோ எடுத்த விஜய்:

தமிழ்நாடும், கேரளாவும் தன்னுடைய இரண்டு கண்கள் என்றும், இந்த இடத்தில் இருந்து எந்த உயரத்துக்கு சென்றாலும் ரசிகர்கள் துணையின்றி அது சாத்தியமாகாது என்றும் ரசிகர்களின் அன்பையும் மறக்க மாட்டேன் என்றும் நீங்க எல்லாம் வேறலெவல் நண்பா, நண்பிகள் என்று ரசிகர்களை பாராட்டி தள்ளி விட்டார்.

நடிகர் விஜய் செம ஹேண்ட்ஸமான லுக்கில் இன்று ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டும், ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ் கொடுத்தும் ரசிகர்களை மகிழ்வித்ததை பார்த்த ரசிகர்கள் மற்ற நடிகர்களுக்கு எல்லாம் இது வெறும் கனவு தான் என கலாய்த்து வருகின்றனர்.

கேரளாவில் உள்ள மலையாள ரசிகர்கள் சிஎம் விஜய் என்றே கோஷமிட்டு நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவுக்கு முழு ஆதரவை கொடுத்துள்ளனர். கோட் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் உங்களுக்காக...