ஜெயிலர் நடிகை மிர்னா மேனனின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீடியோ செம வைரல்.. என்னலாம் பண்றாரு பாருங்க!..

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பல படங்களில் தோல்விக்கு பின்னர் மெகா ஹிட் படமாக அமைந்த நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக மற்றும் வசந்த் ரவியின் மனைவியாக நடித்திருந்த மிர்னா மேனன் தற்போது ஜிம்மில் காட்டிய வித்தைகளை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஜெயிலர் நடிகை:

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், தளபதி விஜயின் பிஸ்ட் என நகைச்சுவை கலந்த ஆக்ஷன் மூவியாக இயக்கியிருந்தார். அதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கிய நிலையில் தொடர்ந்து பல படங்களில் தோல்வியை சந்தித்த ரஜினிகாந்திற்கு இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து ஒரு கம்பேக் படமாக அமைந்தது.

அதிரடி மற்றும் காமெடி கலந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடித்திருந்ததால் கர்நடகா மற்றும் கேரளாவிலும் வசூலை அள்ளியது. மேலும், அனிருத் இசையில் உருவான இப்படத்தில் காவாலய்யா பாடலுக்கு தமன்னா நடனமாடி அசத்தியிருந்தார்.

மெர்சல் காட்டும் மிர்னா மேனன்:

நடிகை மிர்னா மேனன் தமிழில் வெளியான பட்டதாரி படம் அவரது முதல் படமாக அமைந்தது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து களவானி மாப்பிள்ளை, புர்கா, போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் அவருக்கு மருமகளாகவும் வசந்த் ரவிக்கு மனைவியாகவும் நடித்திருந்த அவருடைய அற்புதமான நடிப்பிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

மேலும், மிர்னா மேனன் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து வரும் நிலையில் தற்போது ஜிம்மில் வித விதமான சாகசங்களை காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் ஜோதிகா இந்த வயதிலும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொண்டு பல சாகசங்களை செய்து வீடியோவை போஸ்ட் செய்திருந்தார். அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக மிர்னா மேனன் ஜிம்மில் அசத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அனிதா சம்பத், ஐஸ்வர்யா லட்சுமி, தியா மேனன் உள்ளிட்ட பலரும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக லைக்ஸ் மற்றும் எமோஜிகளை போட்டுத் தள்ளியுள்ளனர். இப்படி எக்ஸர்சைஸ் செய்வதை பார்த்தால் அடுத்து அவர் எதாவது ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருக்கிறாரா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C4w7PO5RR6B/

மேலும் உங்களுக்காக...