ஜெயலலிதாவுடன் 5 படங்களில் பணிபுரிந்துள்ளாரா கமல்..? என்னென்ன படங்கள்..?

Published:

உலகநாயகன் கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி உடன் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் ஜெயலலிதாவுடன் அவர் படங்கள் நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு பதிலாக அவருடன் கமலஹாசன் ஐந்து படங்கள் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்னை வேளாங்கண்ணி, அன்பு தங்கை, சினிமா பைத்தியம், உன்னை சுற்றும் உலகம் ,சூரியகாந்தி ஆகிய ஐந்து படங்களில் ஜெயலலிதாவுடன் நடிகராகவும் நடன இயக்குனராகவும் கமல்ஹாசன் பணி பரிந்துள்ளார்.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான அன்னை வேளாங்கண்ணி என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா நர்ஸ் மேரி என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் கமலஹாசன் ஜீசஸ் கேரக்டரில் நடித்திருந்தார். இருவரும் இணைந்த காட்சிகள் அதிகமாக இல்லை எனினும் இருவரும் இணைந்து பணிபுரிந்த முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது.

இதனை அடுத்து கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான சூரியகாந்தி என்ற திரைப்படத்தில் முத்துராமன். ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஓ மெரி தில்ரூபா என்ற பாடலுக்கு கமல்ஹாசன் தான் நடன இயக்குனராக பணிபுரிந்தார் என்பதும் அவர் ஜெயலலிதாவுக்கு ஸ்டெப்ஸ்களை சொல்லிக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த பாடலை ஜெயலலிதா தனது சொந்த குரலில் பாடினார். அவருடன் இணைந்து டிஎம் சௌந்தரராஜன் பாடினார்.

3 படங்கள் நடித்தும் பிரபலமாகாத நடிகை… சிவாஜியுடன் இணைந்ததும் குவிந்த ரசிகர்கள்.. பத்மப்பிரியாவின் திரை பயணம்..!!

இதனை அடுத்து 1974 ஆம் ஆண்டு வெளியான அன்பு தங்கை என்ற படத்தில் ஜெயலலிதா, முத்துராமன் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கமல்ஹாசன் புத்தர் கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இன்றி ஒரு பாடலுக்கு ஜெயலலிதாவுக்கு நடன இயக்குனராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.

இதனை அடுத்து 1975 ஆம் ஆண்டு வெளியான சினிமா பைத்தியம் என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெயலலிதா மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருமே நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜெயசித்ரா மற்றும் ஜெய்சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில் சினிமா கலைஞர்களாகவே சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ஜெயலலிதா ஆகியோர் நடித்திருப்பார்கள்.

இதனை அடுத்து கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான உன்னை சுற்றும் உலகம் என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த சில காட்சிகளும் உண்டு. அந்த காட்சிகள் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

மோகனுடன் அறிமுகம்.. ரஜினியின் நாயகி.. புற்றுநோயால் மரணம்.. நடிகை ஜோதியின் அறியப்படாத தகவல்..!

அந்த வகையில் ஜெயலலிதாவுடன் கமல்ஹாசன் ஐந்து படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார் என்பதும் ஆனால் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுடன் ஒரு படத்தில் கூட இணைந்து பணி புரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...