மோகனுடன் அறிமுகம்.. ரஜினியின் நாயகி.. புற்றுநோயால் மரணம்.. நடிகை ஜோதியின் அறியப்படாத தகவல்..!

அமைதியான அதே நேரத்தில் அழுத்தமான கேரக்டர்களில் தன்னை உள்வாங்கிக் கொண்டு நடிக்கும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் தான் ஜோதி. தமிழில் இரயில் பயணங்களில் திரைப்படம் முதல் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற நடிகை தான் ஜோதி.

இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்த நிலையில், பள்ளிக்காலத்திலிருந்து இவருக்கு நடனம், நாட்டியம் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்தது. அதேபோல் பள்ளியில் நடைபெறும் நாடகம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

சிறுவயதிலேயே ரேடியோவில் வரும் பாடலை கேட்டு நடனமாடுவது, திரைப்படங்களை பார்த்து அதே போல் நடித்துக் காண்பிப்பது ஆகியவற்றில் ஆர்வமாக இருந்தார். ஜோதியின் நடிப்பு ஆர்வத்தை புரிந்து கொண்ட பெற்றோர்கள் அவருக்கு சினிமாவில் நடிக்க அனுமதி அளித்தனர்.

jyothi 2

கிழக்கே போகும் ரயில் என்ற தமிழ் திரைப்படம் தெலுங்கில் தூர்ப்பு வெல்லே ரயிலு என்ற பெயரில் ரீமேக் ஆகியது. மலையாளம், கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்திருந்த மோகன் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதேபோல் இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஜோதி. இருவருக்குமே இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது. மோகன் புகழ்பெற்ற தமிழ் ஹீரோவானார். ஜோதியும் ஏராளமான படங்களில் நடித்தார்.

முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் உடனே ஜோதிக்கு வம்ச விருட்சம் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகை என்ற பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் தான் டி.ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்திற்கு பின்னர் இரயில் பயணங்களில் என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். அந்த படத்தின் நாயகியாக ஜோதியை நடிக்க வைத்தார். தமிழில் இரயில் பயணங்களில் படத்தின் மூலம் அறிமுகமான ஜோதி, இந்த படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் காரணமாக தொடர்ச்சியாக தமிழில் பல படங்களில் நடித்தார்.

25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த புதுக்கவிதை என்ற படத்தின் நாயகியாக ஜோதி, உமா என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் மூலம்தான் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி காரணமாக விஜயகாந்த்தின் சட்டம் சிரிக்குது, சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள், மீண்டும் விஜயகாந்துடன் ராமன் ஸ்ரீ ராமன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

jothi4

கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். அவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகியது. இதன் பிறகு நடிகை ஜோதியை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்த பெருமை இயக்குனர் சரணை சேரும்.

பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் நாயகன் பிரசாந்த்தின் அம்மாவாக ஜோதி நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு அவர் மீண்டும் தமிழில் ஒரு சுற்று வந்தார். வண்ணத்தமிழ் பாட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அஜித் நடித்த ராஜா உள்பட சில படங்களில் நடித்தார்.

பாலு மகேந்திராவால் இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா? விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம்..!

இந்த நிலையில் தான் கடந்த 2007ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 44வது வயதில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி காலமானார். இளம் வயதில் ஒரு சிறந்த நடிகை மறைந்தது திரையுலகிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...