பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது திரைப்படங்களில் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்துள்ளார். அவர் அறிமுகம் செய்த பெரும்பாலான நட்சத்திரங்கள் திரையுலகில் பிரபலம் ஆகி உள்ளார்கள். என்பதும் தெரிந்ததே. ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் மட்டும் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் ஒரு சில வருடங்களில் திரை உலகை விட்டு விலகிச் சென்று விடும் படி நேர்ந்து உள்ளது. அவ்வாறு பாரதிராஜா தான் இயக்கிய என் உயிர் தோழன் என்ற திரைப்படத்தில் 3 நட்சத்திரங்களை அறிமுகம் செய்தார். அவர்கள் மூன்று பேருமே பெரிய அளவில் திரையுலகில் ஜொலிக்க முடியாமல் போனதுதான் துரதிர்ஷம்.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் என் உயிர் தோழன். பாபு, தென்னவன் மற்றும் ரமா ஆகிய மூவரும் இந்த திரைப்படத்தில் அறிமுகமானார்கள். இந்த படம் ஒரு அரசியல் நையாண்டி படம். இந்த படம் அப்பாவி இளைஞர், அரசியல்வாதி ஒருவரால் பயன்படுத்தப்பட்டு அதன் பின் தூக்கி எறியப்படும் கதையம்சம் கொண்டது.

இந்த அப்பாவி இளைஞருக்கு ஒரு காதலும் உண்டு, அரசியல்வாதிக்கு விசுவாசமாக இருந்து, பின்னர் அவரால் பாதிக்கப்படும் அந்த இளைஞர், தனது காதலுக்கும் மேல் அரசியல்வாதியை நம்பியதால் ஏற்பட்ட மோசம், அதன் பிறகு தனது காதலருக்கு துரோகம் செய்த அரசியல்வாதியை, காதலி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கிளைமேக்ஸ்.

நடிகர் பாக்யராஜின் காதலுக்கு உதவிய வடிவுக்கரசி! நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

இந்த படத்தில் அன்றைய கால அரசியல் வசனங்கள் ஏராளமாக இருந்தது. இதில் சென்சாரில் சில வசனங்கள் நீக்கப்பட்டது இந்த படத்தில் அப்பாவி இளைஞராக பாபு என்பவர் அறிமுகமானார். தர்மா என்ற கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அதேபோல் தென்னவன் என்பவர் அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருப்பார். இவருக்கு பாரதிராஜாவே குரல் கொடுத்தது இவரது கேரக்டருக்கு மிகப்பெரிய அளவில் பலம் வாய்ந்ததாக அமைந்தது. நாயகி ரமா என்பவர் இந்த படத்தில் தான் அறிமுகம் ஆனார். அமைதியான, காதல் வசம் கொண்ட இவர் கிளைமாக்ஸில் தனது காதலனுக்கு ஏற்பட்ட இழப்பால் பொங்கி எழுந்த காட்சி அபாரமாக இருக்கும்.

என் உயிர் தோழன் படத்தில் அறிமுகமாகி தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரமா அதன் பின் ஒரிரு படங்களில் மட்டுமே நடித்து, கிட்டத்தட்ட 20 வருடங்கள் திரையுலகம் பக்கமே எட்டி பார்க்கவில்லை. 2010 ஆம் ஆண்டு முதல் தான் அவர் மீண்டும் அம்மா வேடத்தில் நடிக்க வந்தார் மூன்று அறிமுக நடிகர்களை தாண்டி வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், சார்லி ஆகிய மூன்று கேரக்டர்களை பாரதிராஜா உருவாக்கி இருப்பார். இவர்கள் மூவரும் இந்த படத்தில் அசத்தியிருந்தார்கள்.

விபத்தில் கால் இழந்தாலும் நடனக்கலையில் சாதனை.. திரையுலகிலும் சாதனை செய்த நடிகை..!

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களில் மூன்று பாடல்களை கங்கை அமரன் எழுதியிருந்தார். இளையராஜாவே ஒரு பாடலை எழுதியிருந்தார். தம்பி நிமிர்ந்து பாரடா என்ற பாடலை இளையராஜா எழுதியிருந்த நிலையில் பாரதிராஜா தன்னுடைய உயிர்த்தோழன் என்பதையும் இந்த பாடலின் மூலம் அவர் குறிப்பிட்டு இருப்பார்.

இந்த படம் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் பாபு, ரமா ஆகியோர்களின் நடிப்பிற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது. இந்த படம் தோல்வி படமாக அமைந்தாலும் பாரதிராஜாவின் பெயரைச் சொல்லும் படமாக இருந்தது.

பாபு அதன் பிறகு பெரும்புள்ளி. தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சண்டைக் காட்சியில் மேலே இருந்து குதிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டது. இயக்குனர் டூப் போட்டு எடுத்து விடலாம் என்று சொன்னபோது பாபு இல்லை நானே குதிக்கிறேன் அப்போதுதான் காட்சி இயல்பாக இருக்கும் என்று சொல்லி குதித்தார். அப்போது அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது.

அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற நிலையில் நேற்றுதான் காலமானார். இந்த ஒரு படத்தில் அவருக்கு ஏற்பட்ட ஒரு சின்ன விபத்து அவருடைய வாழ்க்கையை தலைகீழ் ஆக்கிவிட்டது.

பாரதிராஜா படத்தின் ஹீரோ.. கமல், ரஜினி, குஷ்புடன் நடித்து தொழிலதிபரான நடிகர்..!

பாரதிராஜாவின் அறிமுகம் காரணமாக மிகச்சிறந்த நடிகராக வந்திருக்க வேண்டிய பாபு விபத்து காரணமாக மருத்துவமனையில் முடங்கினார். அவரது உயிரை காப்பாற்ற அவரது அம்மா பல வருடங்கள் போராடினார். பாபு நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது என் உயிர் தோழன் படத்தை ரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews