இங்கிலாந்து நாட்டில் இருந்து தமிழ் படத்தில் நடிக்க வந்த நடிகை என்றால் எல்லோருக்கும் ‘மதராசப்பட்டணம்’ படத்தில் நடித்த எமி ஜாக்சன் தான் ஞாபகம் வரும். அதன் பிறகு இவர் ‘தெறி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். தற்போது கூட அருண் விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’மிஷன் சாப்டர் ஒன். என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் எமி ஜாக்சனுக்கு முன்பே இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பதும் அதுவும் மணிரத்னம் படத்தில் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா. ஆமாம் அதுதான் உண்மை. அவர்தான் கிரிஜா.
தியேட்டர் ஆப்பரேட்டர் செய்த வேலை.. தலைகீழான ரிசல்ட்.. தமிழ் சினிமாவில் நடந்த ஒரே ஒரு புதுமை..!
தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்றும் தெலுங்கில் ‘கீதாஞ்சலி’ என்றும் டைட்டில் வைக்கப்பட்ட படத்தில் கிரிஜா நடித்தார். இந்த படத்தின் நாயகனாக நாகார்ஜுனா நடித்திருந்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நாயகன், நாயகி இருவரும் சாவின் விளிம்பில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு இடையே நடக்கும் மோதல், காதல் அதன்பின் ஏற்படும் உருக்கமான முடிவு தான் இந்த படத்தின் கதை.
இந்த படம் கடந்த 1989ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகி பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் வெளியானபோது அவரை கீதாஞ்சலி கிரிஜா என்றுதான் ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த படம் வெளியானபோது அவரது புகழ் உச்சத்திற்கு சென்றது.
அட்டர் பிளாப் ஆன படத்தை மீண்டும் எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட்டாக்கிய விசு.. என்ன படம் தெரியுமா?
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகை கிரிஜா மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நான்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று விட்டார்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆர்செட் என்ற நகரில் பிறந்து வளர்ந்தவர் கிரிஜா. இவரது தந்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். தாயார் பிரிட்டனை சேர்ந்தவர்.
18 வயதிலேயே இவர் பரதநாட்டியம் கற்றுள்ளார். யோகா மற்றும் இந்தியாவின் ஆன்மீகம் குறித்து ஆய்வு செய்து இங்கிலாந்து பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பல ஆண்டுகள் இவர் பாண்டிச்சேரியில் உள்ள ஆசிரமத்தில் இருந்தார் என்றும் அங்கு தான் அவர் யோகா குறித்த டாக்டர் படிப்புக்கான ஆய்வுகளை செய்தார் என்றும் கூறப்படுகிறது.
கிரிஜா தற்போது லண்டனில் மிகப்பெரிய எழுத்தாளராக இருந்து வருகிறார். அவர் அந்நாட்டில் உள்ள பிரபல பத்திரிகையில் கட்டுரை எழுதி வருகிறார். அவரது கட்டுரைக்கு சமீபத்தில் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய தந்தையின் ஊரான கர்நாடகத்திற்கு சமீபத்தில் கிரிஜா வந்ததாகவும் அப்போது காந்தாரா படத்தை இயக்கிய இயக்குனர் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்ததாகவும் அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரிஜா நடிக்கும் கன்னட திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.