மைக் மோகன் விட்ட இடத்தைப் போட்டி போட்டுக் கொண்டு பிடித்த நடிகர்கள்… 2வது இன்னிங்ஸில் வெற்றி பெறுவாரா வெள்ளிவிழா நாயகன்?

கமல், ரஜினிகாந்த் தமிழ்சினிமாவில் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருந்த சமயத்திலும் சில நடிகர்கள் அவர்களுக்கு இணையாக பல படங்களில் வெற்றியைத் தக்க வைத்தனர். விஜயகாந்த், மோகன், ராமராஜன் படங்களைச் சொல்லலாம்.

அந்த வகையில், 1983ல் இருந்து 1988ம் ஆண்டு வரை – ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்குப் பிறகு தமிழ்த் திரை உலகில் அதிகம் சம்பாதிக்கக்கூடிய நடிகராக இருந்தவர் மைக் மோகன். இவரை வெள்ளிவிழா நாயகன் என்றும் சொல்வார்கள். ஏன்னா இவர் நடிச்ச படங்கள் எல்லாமே அப்போது வெள்ளி விழா கொண்டாடின.

Mohan with Mic
Mohan with Mic

இவர் மைக்கைப் பிடித்து நடித்தாலே படங்கள் வெற்றி தான். அதனால் தான் மைக் மோகன் ஆனார். அந்தக் காலகட்டத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார். விஜயகாந்த் கூட மோகனுக்குப் பின்னால் தான் இருந்தார்.

அடுத்ததாக யாருமே எதிர்பார்க்காத வகையில் 2 விஷயங்கள் நடந்தன. ஒன்று மோகனின் படங்கள் தோல்வியைத் தழுவின. அடுத்து அந்த கேப்பில் ராமராஜன் நுழைந்தார்.

ராமராஜனுக்கு கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம் இருந்தது. அதனால் அவர் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்தார். 1989ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் பி, சி சென்டர்களில் நல்லா பிக் அப் ஆகி அதிரி புதிரி வெற்றியைக் கொடுத்தது. அதே நேரத்தில் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் இளையதிலகம் பிரபுவின் படங்களுக்கும் ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர். சத்யராஜ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்து புரட்சி நாயகன் ஆனார்.

மோகன் இதற்கிடையில் 20 படங்களுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தும் அடுத்தடுத்து வந்த அவரது படங்களை யாரும் பெரிதாக பார்க்கவில்லை. அவர் சோகமயமானார். அதன்பிறகு பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை. அவரது அடையாளமான லைட் காமெடி மற்றும் ரொமாண்டிக் காமெடிகளுக்கான வரவேற்பு நின்று போய்விட்டன.

மேலும் அவரது பழைய வழிகாட்டியான இளையராஜாவும் அப்போது அவருடன் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. அது மட்டுமல்லாமல் அவருக்கும் அவரது டப்பிங் ஆர்டிஸ்ட் சுரேந்தருக்கும் வந்த சில பிரச்சனைகளால் மோகனின் படங்களுக்கான மாஸ் கிடைக்கவில்லை. அது மட்டுமல் இல்லாமல் அவருக்கு தமிழ் தெரியாது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான குரலில் டப்பிங் செய்ய வேண்டியிருந்தது. அது ஒரு காலத்தில் டப்பிங் ஆர்டிஸ்ட் இருந்த போது அவருக்கு அது பிரச்சினையாக இல்லை. ஆனால் அவர் போனதும் பெரும் தலைவலியாகிவிட்டது. அதனால் 1991 மற்றும் 1992க்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Mohan
Mohan

அவருக்கு டிவியில் நிறைய சலுகைகள் கிடைத்தன. தூர்தர்ஷன், சன் டிவி போன்றவற்றில் பெரிய தொகைகளுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் பயன்படுத்தவில்லை. அதற்காக பின்னாளில் அவர் வருந்தியுள்ளார்.

மேலும் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். அதாவது அவரது சொத்தில் கவனமாக முதலீடு செய்தார். பெங்களூரில் தனக்கான சொத்தை வாடகைக்கு விட்டு சம்பாதித்தார். தொடர்ந்து அவர் 1998ல் ஒரு படத்தைத் தயாரிக்க முயன்றார்.

மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் சுமார் 30 லட்சங்களை முதலீடு செய்தார். ஆனால் படமும் தோல்வியடைந்தது. 1999ல் சங்கமம் திரைப்படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதய கோவில், உயிரே உனக்காக, மெல்லத்திறந்தது கதவு, பயணங்கள் முடிவதில்லை, மௌனராகம், நெஞ்சத்தைக்கிள்ளாதே, கிளிஞ்சல்கள் படங்களை இப்போது பார்த்தாலும் அந்த காலகட்டங்களில் மோகனின் திரையுலக சாம்ராஜ்யம் எப்படிப்பட்டது என்பது தெரியவரும்.

தற்போது ஹரா என்ற ஒரு படத்தில் மோகன் நடித்து வருகிறார். இதே படத்தில் குஷ்பூ, யோகிபாபு உள்பட பலரும் நடித்துள்ளனர். விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...