ஆடி மாசம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவாங்கன்னு தெரியும்… அதுல இம்புட்டு விசேஷம் இருக்கா?!

Published:

ஆடி மாசம் அம்மன் கோவில்களுக்குச் சென்றால் கூழ் ஊற்றி வழிபாடுவாங்க. தெய்வீக மாதம் என்றும் சொல்லலாம். பார்வதி தேவியே பூமிக்கு வந்து அம்மனாக அவதரித்த காலமும் இது தான். பார்வதி தேவி கடுமையாகத் தவம் இருந்து சிவனின் அருளைப் பெறுகிறாள்.

அப்படிப்பட்ட அவருக்கு சிவன் இந்த மாதத்தை சிறப்பாக அர்ப்பணிக்க வேண்டும் என்ற வரத்தையும் கொடுக்கிறார். அதன்படி ஆடி மாதம் அம்பிகைக்குரிய மாதம். இந்த மாதத்தில் சிவன் சக்திக்குள்ள அடங்கி விடுகிறார். அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு மேலோங்கி இருக்கிறது.

அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மிகவும் பிரசித்திப் பெற்றது. ஆடி செவ்வாயில் தேடிக்குளின்னு ஒரு பழமொழி உண்டு.

Amman 1
Amman

பெண்கள் தலைக்கு எண்ணைத் தேய்த்துக் குளித்து அம்மனை வழிபடுகையில் தீர்க்க சுமங்கலியாக இருப்பர். அதே போல ஆடி வெள்ளிக்கிழமையில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வழிபட்டால் நல்ல அறிவாற்றலுடன் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் நல்ல காரியம் செய்வது உகந்தது அல்ல என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளனர். அம்மனுக்கே உகந்த மாதம் என்பதால் இவ்வாறு சொல்லி இருக்கின்றனர். ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் ரொம்பவே விசேஷமாக இருக்கும். இது வழிபாட்டுக்கும், விரதத்துக்கும் உரிய மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள்.

இந்த காலகட்டத்தில் அம்மை நோய் அதிகமாக பரவும். இதற்கு முன்னர் இருந்த சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் வெப்பம் அதிகமாக இருந்து பருவநிலை மாறி காற்றுகாலம் வரும்போது அம்மை நோய் வேகமாக பரவுகிறது. அதனால் இந்த மழையையே தெய்வமாகப் போற்றி பாதுகாத்து வணங்கிட்டு வருகிறோம். இந்த மாதத்தில் அம்பிகைக்கு கூழ் ஊற்றினால் அம்பாள் எல்லா அருளையும் வழங்குவாள் என்பது ஐதீகம்.

இதுக்கு ஒரு கதையும் உண்டு. தவத்தில் சிறந்து விளங்குகிறார் ஜபலக்கனி முனிவர். இவர் ஒரு காலத்தில் கார்த்தவீரிய அர்ச்சுனன் என்பவரால் பகையின் காரணமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி.

கணவர் இறந்த துக்கம் தாளாமல் இந்த ரேணுகாதேவி தீயை மூட்டி அதில் விழுந்து விடுகிறாள். உடனே இந்திர பகவான் மழையாகப் பொழிந்து அந்தத் தீயை அணைத்து விடுகிறார். அந்தத் தீயில் பாதி எரிந்து வெளியே வருகிறாள் ரேணுகாதேவி.

தீக்காயங்கள் மற்றும் தீக்கொப்புளங்களோடு வெற்று உடலாக இருந்த அவர் வேப்பமரத்தின் அடியில் சென்று அந்த இலைகளைப் பறித்து ஆடையாக உடுத்துகிறாள். தீக்காயத்தில் இருந்து விடுபடுவதற்காக இப்படி செய்கிறாள்.

Aadi Kool 2 1
Aadi Kool 2

பசியைப் போக்குவதற்காக அருகில் உள்ள ஊருக்குச் சென்று பச்சரிசி, இளநீர், பானகம், வெல்லம் எல்லாவற்றையும் வாங்கி வந்து கூழ் வார்த்து குடிக்கிறாள். அப்போது அவர் முன்பாக சிவபெருமான் தோன்றுகிறார். பூலோகத்தில் இனி அம்மை நோய்க்கு வேப்பிலை நல்ல மருந்தாக இருக்கும். இளநீர் நல்ல நீராகாரமாக இருக்கும். கூழ் நல்ல ஆகாரமாக இருக்கும்.

அதே போல இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்துக் கொடுக்கும் போது அம்மை நோயில் இருந்தும் விடுபட முடியும். அம்பிகையின் அருளையும் பெற முடியும். ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்னு சொல்வாங்க. அப்படி வேகமாக வீசும் காற்றில் உள்ள தூசு துகள்கள் பலருக்கும் ஒவ்வாமையை உண்டாக்கி சளி, இருமலை வரவழைத்து விடும். அதிலிருந்தும் பாதுகாக்க இந்த கூழ் ஊற்றுவாங்க.

 

மேலும் உங்களுக்காக...