3 வேடங்களில் நடித்து அடித்து நொறுக்கி தூள் கிளப்பிய தமிழ்பட ஹீரோக்கள்

Published:

தமிழ்ப்படங்களில் 2 வேடங்களில் நாயகர்கள் வெளுத்துக் கட்டுவதைப் பார்த்து இருக்கிறோம். 4, 9, 10, 11 வேடங்களையும் பார்த்து இருக்கிறோம். இப்போது 3 வேடங்களைப் பற்றிப் பார்ப்போம். இது கொஞ்சம் சுவாரசியமான படங்களாகத் தான் உள்ளன. என்ன ரெடியா… பார்க்கலாமா…!

தெய்வ மகன்

Deiva Magan 1
Deiva Magan

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முற்றிலும் மாறுபட்ட 3 கேரக்டர்களில் நடித்த படம் தெய்வ மகன். 1969ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியானது. சிவாஜி, ஜெயலலிதாஉள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.

முதன்முதலாக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்ப்படம் இதுதான். பாதி கோரமான முகத்துடனும் பாதி நல்ல முகத்துடனும் வரும் சிவாஜி தான் படத்தில் டாப். இவரது நடிப்பு அபாரம். ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த வேடத்தைப் பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது.

மூன்று முகம்

Moondru mugam 1
Moondru mugam 1

1982ல் ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளியான படம் மூன்று முகம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸான 3 கேரக்டர்களில் நடித்த படம். 250 நாள்களைக் கடந்து வெற்றி வாகை சூடியது. டெல்லிகணேஷ், செந்தாமரை, தேங்காய் சீனிவாசன், பூர்ணம் விஸ்வநாதன், சத்யராஜ், ராதிகா, சில்க், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் சூப்பர். இந்த படத்தில் ரஜினியின் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்குகளும் சூப்பரோ சூப்பர்.இந்தப் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் ரஜினிகாந்த் பெற்றார்.

அபூர்வ சகோதரர்கள்

1989ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம். கமல், ரூபினி, நாகேஷ், ஜெய்சங்கர், கௌதமி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், மௌலி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தந்தை மற்றும் 2 மகன்கள் என 3 முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர். இந்தப் படத்தில் கமல் குள்ள வேடத்தில் அப்புவாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தப் படத்தின் கதையை கிரேசி மோகன் எழுதியுள்ளார். கமல் தயாரித்துள்ளார்.

நம்ம அண்ணாச்சி

Namma Annachi 1
Namma Annachi

1994ல் தளபதியின் இயக்கத்தில் தேவாவின் இன்னிசையில் வெளியானது நம்ம அண்ணாச்சி. சரத்குமார், ராதிகா, ஹீரா, ராணி, ரூபினி, மோகன் நடராஜன், மேஜர் சுந்தரராஜன், விவேக், தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சரத்குமார் 3 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

வரலாறு

Varalaru
Varalaru

2006ல் வெளியான படம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார். அஜீத்குமார், அசின், கனிகா, ரமேஷ் கண்ணா, சுமன், பொன்னம்பலம், பாண்டு, மன்சூர் அலிகான், கே.எஸ்.ரவிக்குமார், சந்தான பாரதி, ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தல அஜீத் இந்தப் படத்தில் 3 முற்றிலும் மாறுபட்ட ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

இந்தப்படத்தில் பெண் குணாதிசயங்களுடன் நடிக்கும் அஜீத்தின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. ரசிகர்கள் இந்தக் கேரக்டருக் காகவே ஆர்வமுடன் படம் பார்க்க வந்தனர்.

மேலும் உங்களுக்காக...