’கோட்’ படத்தின் முதல் நாள் உண்மையான வசூல் எவ்வளவு? ரசிகர்கள் பரப்பும் தகவல் உண்மையா?

Published:

 

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில கலவையான விமர்சனங்களும் வந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தாலும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான உண்மையான வசூல் தகவலை தற்போது பார்ப்போம்.

’கோட்’ நேற்றைய முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இதற்கு முந்தைய திரைப்படமான பீஸ்ட், சர்கார், லியோ ஆகிய படங்களும் 30 கோடி முதல் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ முதல் நாளில் 26 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அதைவிட அதிகமாகவே ’கோட்’ திரைப்படம் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.

மேலும் இந்த படம் கர்நாடகாவில் 9 கோடியும் கேரளாவில் 6 கோடியும் வசூல் செய்த நிலையில் தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் சுமாரான வசூலையே செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படம் இந்தியா முழுவதும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் முதல் நாளில் வெளிநாட்டில் வசூல் செய்த தொகை குறித்து தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் அந்த தகவல் வெளியானால் இன்னும் அதிகமான தொகை இந்த படம் வசூல் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் 100 கோடி 150 கோடி முதல் நாளில் ’கோட்’  வசூல் செய்ததாக சினிமா டிராக்கர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...