நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், விஜய் கட்சியில் இணைகிறாரா? பரபரப்பு தகவல்..!

Published:

சீமானின் நாம் தமிழர் கட்சியில் முன்னணி பேச்சாளராக இருந்து வரும் காளியம்மாள் அக்கட்சியில் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே அவர் அதிலிருந்து விலகி விஜய் கட்சியில் சேர போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் காளியம்மாளை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று சீமான் பேசியதாக கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காளியம்மாள் இது குறித்து அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீமான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்த காளியம்மாள், அதிமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி அவர் விஜய்யின் கட்சியில் சேர போகிறார் என்ற தகவலும் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதுவரை நாம் தமிழர் கட்சியில் உள்கட்சி பிரச்சனை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு சில உள் கட்சி பிரச்சினை வந்து கொண்டிருப்பதாகவும் வளரும் கட்சியில் உள்கட்சி பிரச்சனை இயல்புதான் என்றாலும் முன்னணி தலைவர்களே சீமான் உடன் கருத்து வேறுபாடுடன் இருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று கூறப்படுகிறது.

இது குறித்து காளியம்மாள் விளக்கம் அளித்த போது ’பணத்திற்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறுபவர் நான் அல்ல என்றும், நாம் தமிழர்  கட்சியில் தான் தொடர்ந்து பயணம் செய்கிறேன் என்றும் கட்சி மாறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்பது உண்மை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...