பள்ளியில் ஆன்மீகப் பேச்சு சர்ச்சை : எரிமலையாய் வெடித்த அன்பில் மகேஷ்.. தலைமையாசிரியை பணியிட மாற்றம்..

Published:

பள்ளிக் கல்வித் துறையில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கோபத்தின் உச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் இருக்கிறார். கடந்த மாதம் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்.சி.சி முகாமில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் இதுபோன்ற முகாம்கள் நடைபெறுவது குறித்து அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் முன் அனுமதி பெற்ற பிறகே நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு பறந்தது.

இந்தச் சர்ச்சை தற்போது ஒய்ந்து முடித்தபின் நேற்று மீண்டும் ஒரு புது சர்ச்சை வெடித்திருக்கிறது. மேடை நகைச்சுவைப் பேச்சாளராக அறிமுகமாகி அதன்பின் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் மக்களுக்கு ஆன்மீக போதனைகளையும், சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார் மகாவிஷ்ணு என்பவர்.

ஒரு சின்ன நக வெட்டியை வைத்து உருவான சூப்பர் சண்டைக் காட்சி.. சிறு துறும்பும் பல் குத்த உதவும் பழமொழியை மெய்ப்பித்த மிஷ்கின்..

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் நன்னெறி சொற்பொழிவினை நிகழ்த்தினார். அப்போது முற்பிறவியில் செய்த பாவங்களின் காரணமாகத் தான் இப்பிறவியில் மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்கிறோம்..என்ற தொணியில் பேசினார். அப்போது அப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் மகாவிஷ்ணுவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுப் பள்ளியில் ஆன்மீக வகுப்புகளை எடுப்பது ஏன் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு மகாவிஷ்ணு சற்று ஆவேசமாகப் பேச அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விஷயம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்குச் செல்ல இன்று காலை செய்தியாளர்களிடம் மகாவிஷ்ணு மேல் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும், என்னோட ஏரியாவுல வந்து என் ஆசிரியரையே அவமானப்படுத்தி இருக்க.. சும்மா விட மாட்டேன் என்று ஆவேசமாக கோபத்துடன் கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியை தற்போது திருவள்ளுர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...