கமல், ரஜினியின் அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நடிகர்…! அறிவுரையைக் கேட்டு சூப்பர்ஸ்டார் ஏற்ற சபதம் இதுதான்..!

Published:

அந்தக் காலத்தில் காதல் மன்னன் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ஜெமினிகணேசன் தான். அழகான முகம், அம்சமான நடிப்பு, அற்புதமான குரலுக்குச் சொந்தக்காரராகவும், அன்றைய இளைஞர்களின் ரோல் மாடலாகவும் ஜொலித்தார்.

அதுமட்டுமல்லாமல் தாய்மார்களின் பேராதரவையும் பெற்ற நடிகர் இவர் தான். எம்ஜிஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களுக்கே டஃப் கொடுத்தவர் இவர் என்றால் மிகையில்லை. அப்படிப்பட்ட அற்புதமான கலைஞரான ஜெமினிகணேசன் திரையுலகிலும் பல நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

Gemini Ganesan
Gemini Ganesan

அந்த வகையில் தற்போது வரை தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகர்களாக ஜொலித்துக் கொண்டு இருக்கும் கமல், ரஜினிக்கே வழிகாட்டி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் இந்த ஜெமினிகணேசன் தான். அந்த இனிய தருணத்தைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போமா…

அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் ஜெமினிகணேசன் தளபதி மீர்காசிம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதுமட்டுமல்லாமல் படத்தில் நடித்த கமல் மற்றும் ரஜினிக்கு சில அறிவுரைகளைக் கூறினார். அவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணிக்குமாறு அறிவுறுத்தினார்.

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களைப் போல கமல், ரஜினியும் திரையுலகில் ஜொலிக்க வேண்டும் என்று முதலில் கணித்தவர் ஜெமினிகணேசன் தான். அவர்கள் கடினமாக உழைத்து கடுமையாகப் போட்டியிட்டால் இப்படி வளர்ந்து விடலாம் என்று அப்போதைய வளர்ந்து வரும் நடிகர்களின் மத்தியில் வெளிப்படையாகக் கூறினார்.

அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்குமாறும், நடிப்பதற்கு என்னென்ன திட்டமிட வேண்டும் என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லி ஊக்கப்படுத்தினார்.

அப்போது ஜெமினிகணேசனின் அறிவுரையைக் கேட்ட ரஜினிகாந்த் இனி வில்லன் வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தார். அதுமட்டுமல்லாமல் நடிக்கும் கேரக்டர்களைச் சிறப்பாக செய்வதாகவும் சபதம் மேற்கொண்டார்.

அதே சமயம், கமல் தனக்குள்ளேயே ஒரு நடிகர் கமலை வளர்த்து வந்தார். அதற்காக சுவாரசியமான திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தினார். 1971ல் அன்னை வேளாங்கண்ணி படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதைக் கண்ட ஜெமினிகணேசன் ரொம்பவே வருத்தப்பட்டார்.

K.B
K.B

பின்னர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் வழிகாட்டுதலின் பேரில் கமல் தனது திறமைகளை மெருகேற்றிக் கொள்ளுமாறு ஜெமினிகணேசன் ஆலோசனை கூறினார். அதுமட்டுமல்லாமல் கமலை உங்கள் படங்களில் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவன் மிகச் சிறந்த கலைஞன் என்று கே.பாலசந்தரிடம் ஜெமினிகணேசன் பரிந்துரை செய்தார்.

மேலும் உங்களுக்காக...