மகர ராசி அன்பர்களே! மகர ராசியைப் பொறுத்தவரை சனி பகவான் வக்ர கதியில் உள்ளார், சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார். புதன் பகவான் உச்ச நிலையில் உள்ளார். புதன் பகவானின் ஆசியால் புத்தி, அறிவு சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
ஆனால் சுக்கிர பகவானின் இட அமைவால் பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் பெரிதளவில் சாதகமானதாக இருக்காது. பணவரவு தட்டுப்பாடாகவே இருக்கும். கையில் இருக்கும் பணத்தினைவிட செலவு கூடுதலாகவே இருக்கும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
வேலை சார்ந்த மாற்றங்கள் குறித்து முறையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன் கைகூடினாலும் தற்போதைக்குத் திருமண காரியங்களை நடத்தாமல் சிறிது காலம் தாழ்த்திச் செய்யவும்.
மேலும் முதலீடுகளைச் செய்ய நினைப்போர் முதலீடுகள் குறித்த ஆவணங்களைச் சரிபார்த்தல், அதற்கான கடன்களை வாங்க அணுகுதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்யலாம். ஆனால் அதற்கான அட்வான்ஸ் தொகை கொடுத்தல் போன்ற முக்கிய விஷயத்தினை தற்போதைக்குச் செய்யாமல் காலம் தாழ்த்தவும்.
உயர் கல்வி ரீதியாகச் செலவினங்கள் நெருக்கடியினைக் கொடுக்கும், முடிந்தளவு முன் திட்டமிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். வேலை செய்யும் இடங்களில் படபடவென செயல்படாமல் பொறுமையுடன் செயல்படுதல் வேண்டும்.
குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் தேவையற்ற பேச்சுகள் அதிகரிக்கும்; அதனால் காரசாரமான விவாதங்கள் தேவையில்லாத மன உளைச்சலைக் கொடுக்கும்.
முடிந்தளவு பெரிதுபடுத்தாமல் கண்டும் காணாமல் இருத்தல் நல்லது. உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் உங்களுடைய வாழ்க்கை முறையில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாதீர்கள்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
அதிலும் குறிப்பாக உடற் பயிற்சி, உணவுப் பழக்கங்கள் சார்ந்து எந்தவொரு மாற்றத்தினையும் செய்யாமல் இருத்தல் நல்லது. வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் ஏற்படும்; வீட்டில் உள்ள பழைய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை மாற்றி புதுப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
இல்லத்தரசிகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும்.