2022ல் ரசிகர்களைக் கடும் அதிருப்தி அடையச் செய்த படங்கள் – ஒரு பார்வை

Published:

திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு தான் ரசிகர்கள் படங்களை செலக்ட் செய்து செல்வார்கள். ஆனால் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் ஏமாற்றத்தோடு வெளியே வந்தால் படம் படுதோல்வி என்றே சொல்லலாம். அந்த வகையில் கடந்த ஆண்டு படுதோல்வியை சந்தித்த படங்கள் பற்றி இங்கு பார்ப்போம்

கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கிய படம். விக்ரம் மாறுபட்ட வேடத்தில் நடித்தும் ப்ளாப் ஆனது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், பத்மப்ரியா, கனிகா, மிர்ணாளினி, ரோபோசங்கர் என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம்.

கேப்டன்

Captain
Captain

ஆக்ஷன், த்ரில்லர் என்று படம் வெளியானது. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆர்யாவின் நடிப்பும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய படம். படத்தோட டிரெய்லரைப் பார்த்து ஹாலிவுட் ரேஞ்ச்ல இருக்கும்னு எதிர்பார்த்து ஏமாற்றத்தைத் தந்த படங்களில் இதுவும் ஒன்று.

என்ன சொல்ல போகிறாய்?

ESP
ESP

டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வின் இந்தப் படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஹரிஹரன் இயக்கத்தில் காமெடி, ரொமான்ஸ் என்று வெளியானது. ஆனால் படமோ படு தோல்வியைச் சந்தித்தது.

பிரின்ஸ்

Prince
Prince

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். இவருடைய படங்கள் எப்போதும் காமெடி, காதல் என்று இருக்கும். ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படத்தில் போதுமான அளவு சுவாரசியமில்லாமல் போய்விட்டதே படத்தின் தோல்விக்குக் காரணம்.

வீரமே வாகை சூடும்

VVS
VVS

என் வீரமே வாகையே சூடும் என்று உலகநாயகன் கமல் விக்ரம் படத்தில் அறிமுகப்பாடலைப் பாடியிருந்தார். அந்தப் பாடலில் வரும் வரிகள் தான் இந்தப் படத்தின் தலைப்பு. அதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இது விஷால் நடித்த ஆக்ஷன் படம். து.பா.சரவணன் இயக்கத்தில் முன்னணி பிரபலங்கள் நடித்தும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு ஏமாற்றத்துடனே வந்தனர்.

மேலும் உங்களுக்காக...