சிஎஸ்கே தோல்வியை கொண்டாடும் மும்பை உள்பட 6 அணிகள்.. காரணம் இதுதான்..!

Published:

நேற்றைய சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கும். ஆனால் தோல்வி அடைந்ததால் பிளே ஆஃப் தகுதி பெறுவது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததை மும்பை உள்பட ஆறு அணிகள் கொண்டாடி வருகின்றன. காரணம் தங்களுக்கும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதே ஆகும்.

csk vs rr2 1 புள்ளி பட்டியலில் சென்னைக்கு கீழே மும்பை, லக்னோ, பெங்களூர், ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 6 அணிகள் உள்ளன. இந்த ஆறு அணிகளுடன் சென்னை அணியும் சேர்த்து ஏழு அணிகளில் மூன்று அணிகள் அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

நேற்று சென்னை அணி தோல்வி அடைந்ததால் மேற்கண்ட ஆறு அணிகளுக்கும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு சென்று விடும். அதேபோல் லக்னோ இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி உடன் சம நிலைக்கு வந்துவிடும்.

பெங்களூரு பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் இரண்டிலும் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னுக்கு தள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

csk pathirana
இப்போதைக்கு குஜராத் அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் போட்டிகள் அனைத்து அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் இனிவரும் போட்டிகளில் வெற்றி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் தோல்வி அடைய மணி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிஎஸ்கே இன்னும் ஒரு போட்டியில் வென்றுவிட்டால், அந்த அணி பிளே ஆஃப் செல்வதை எந்த அணியாலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...