கமல் படத்தில் ஓகே சொல்லி… ரஜினி படத்திற்கு நோ சொல்லும் ஃபகத் பாசில்!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்லர். இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மல்டி ஸ்டார் படமாக கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பாடல்களும் பட்டி தொட்டி எல்லாம் வைரலாகி மாஸ் ஹிட் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லைக்கா ப்ரொடெக்க்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பாகுபலி வில்லன் ராணா , துசாரா விஜயன் என பல முன்னணி நடிகர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க அவருக்கு ஐந்து முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க ஃபகத் பாசில் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை எனவும் சிறிது தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பாலிவுட் படத்தின் ரீமேகா? மாஸ் அப்டேட் இதோ

அதற்கு காரணம் சமீபத்தில் அவர் வில்லனாக நடித்த மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஆனால் அந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்களின் தலைவனாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அவருக்கு பல விமர்சனங்களை பெற்று கொடுத்தது. மேலும் சமூக வலைத்தளங்களில் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னதாக ஃபகத் பாசில் தமிழில் கமல் நடிப்பில் விக்ரம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அந்தப் படங்கள் இந்த அளவிற்கு மோசமான விமர்சனங்களை அவருக்கு பெற்று தரவில்லை.

அதனால் இனி அவர் நடிக்கும் தமிழ் படங்களில் ஒரு பாசிட்டிவ்வான வில்லனாக மட்டுமே நடிப்பதாகவும் முழுக்க முழுக்க நெகட்டிவ் வில்லன்களில் நடித்து தவறான விமர்சனங்களில் மாட்டிக்கொள்ள விரும்பாததால் ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க அவர் தயக்கம் காட்டி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

மேலும் உங்களுக்காக...