ஷாருக்கானை தொடர்ந்து மீண்டும் பாலிவுட் ஹீரோவுடன் கைகோர்க்கும் அட்லி!

Published:

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக தொடங்கியுள்ளது. தென் இந்திய சினிமாவின் முன்னணி இளம் இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மாஸ் ஹிட் கொடுத்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் முதன் முதலில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்த படம் மௌன ராகம் என்னும் படத்தின் ரீமேக் படமாக வெளியாகி மக்கள் மனதில் பெரிதளவில் இடம் பிடித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் அட்லி அடுத்தடுத்து படங்களில் இணைய தொடங்கினார்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என்றும் என்னும் மூன்று திரைப்படங்களும் விஜய்க்கு வெற்றி படங்களாகவே அமைந்தது. இந்த திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்று வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.

மேலும் தளபதியுடன் நான்காவது ஒரு படத்தில் அட்லி இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகவும் கூறப்படுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பாலிவுட் படத்தின் ரீமேகா? மாஸ் அப்டேட் இதோ

இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படம் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா ஹிந்தியில் களமிறங்கி கலக்கியுள்ளார் மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது இயக்குனர் அட்லியின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் அட்லி ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கானின் நண்பரும் தொழில் போட்டியாளருமான சல்மான்கானுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அட்லி தனது அடுத்த படத்தின் கதையை சல்மான் கான் இடம் கூறியுள்ளதாகவும் இந்த கதை உறுதியாகும் பட்சத்தில் படமாக வெளிவர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

 

 

 

மேலும் உங்களுக்காக...