அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் பாலிவுட் படத்தின் ரீமேகா? மாஸ் அப்டேட் இதோ

நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்த்து உள்ளார்.

இந்த படம் குறித்த அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியானது, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டிற்கு பின் இந்த படம் குறித்த வேறு எந்த அப்டேட்டுகளும் வெளியாகாத நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் இறுதி வாரத்தில் தொடங்கும் என உறுதியான தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் தமன்னா மற்றும் திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்த படம் குறித்த மாஸ் அப்டேட்கள் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் உள்ள அபுதாபியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த பகுதி சென்னையில் நடத்த உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அபுதாபியில் 60% படப்பிடிப்பு நடத்தப்படுவதாக இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்திருக்கிறார். மேலும் நடிகர் அஜித்தும் துபாயில் இருப்பதால் இந்த படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது.

அஜித் நடிக்கும் இந்த விடாமுயற்சி படத்தின் கதை குறித்த தெறிக்கவிடும் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ஆபீஸியல் ரீமிக்ஸ் திரைப்படமாக உருவாக உள்ளது. அதாவது 1997 இல் வெளிவந்த பிரேக் டவுன் என்னும் ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் விடா முயற்சி. இந்த படம் அஜித்திற்குரிய மாசான ஆக்சன் படமாக இல்லாமல் சற்று மாறுதலான கதைக்களத்தை கொண்டுள்ளது.

பிரேக் டவுன் படத்தின் மையக்கதை, இந்த படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் ஒரு லாங் டிரைவ் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் இடம் ஒரு பாலைவனமாக இருப்பதால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியான இடமாக அமைகிறது. அப்பொழுது ஹீரோயினை சில கும்பல்கள் கடத்தி சென்று விடுகின்றனர். அந்த கும்பலிடம் இருந்து ஹீரோயினை ஹீரோ எவ்வாறு மீட்டெடுக்கிறார், வில்லன்களை அழிக்கிறார் என்பதுதான் கதை.

விஜய்யின் லியோ படத்திற்க்கு சென்சார் குழு வைத்த ஆப்பு! அதிர்ச்சியில் லோகேஷ்!

இந்த ஒன் லைன் கதை ஹாலிவுட் படத்திற்கு போதுமானதாக இருந்தாலும், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு இது ஒரு காட்சியாக மட்டுமே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் வேறு சில கதைகளின் மையக் கருத்துக்களும் இந்த படத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முழு கதை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்களின் ஆர்வமாக இருந்தாலும் படம் வெளியாகும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews