ரஜினிகாந்த் நடித்த ஒரே ஒரு குறும்படம்.. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஆச்சரியம்..!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி இருக்கின்றன. அதனால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபமும் இயக்குனருக்கு நல்ல பெயரும் கிடைத்துள்ளது. ஆனால் ரஜினிகாந்த் ஒரே ஒரு குறும்படத்தில் நடித்ததால் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் மற்றும் விழிப்புணர்வு கண்டு திரை உலகமே ஆச்சரியம் அடைந்தது. அந்த குறும்படம் தான் தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்ற குறும்படம்.

ரஜினிகாந்த் நடிப்பில், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த திரைப்படம் மனிதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெள்ளி விழாவை சிறப்பாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர்.

கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

images 10

அப்போதுதான் ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. மனிதன் திரைப்படத்தின் வெற்றி விழாவை சாதாரணமாக நடத்தாமல் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த நேரத்தில் கண் தானம் என்பது ஓரளவுக்கு பிரபலம் அடைந்தாலும் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு இல்லாத நிலையில் இருந்தது. எனவே சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை உடன் இணைந்து ஒரு கண் தான நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.

மனிதன் வெள்ளி விழாவையும் கண் தானம் நிகழ்ச்சியையும் ஒரே நேரத்தில் நடத்தினால் அதிலும் ரஜினிகாந்த் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை பேசினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார். வெறுமனே பேசினால் பத்தாது என்று எஸ்பி முத்துராமனிடம் கூறி கண் தானம் குறித்த ஒரு குறும்படத்தை ரஜினியை வைத்து எடுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஜினியும் சிறப்பான விஷயம் தானே செய்து தருகிறேன் என்று அந்த குறும்படத்தில் நடித்துக் கொடுத்தார். தானத்தில் சிறந்த கண் தானம் என்ற அந்த ஐந்து நிமிட குறும்படத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் இருக்கும். இந்த குறும்படம் மனிதன் படத்தில் வெற்றிவிழாவின் போது ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய போது சங்கரா நேத்ராலயா மருத்துவமனை பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. உங்களுக்கு கண்கள் தானே தானமாக வேண்டும், நானும் என் குடும்பத்தார்களும் கண்களை தானமாக தருகிறோம், அதுமட்டுமின்றி என்னுடைய ஒவ்வொரு ரசிகர்களும் உங்களுக்கு கண் தானம் தருவார்கள், நீங்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கு கண்கள் குவியும், அதற்கு நான் உத்தரவாதம், ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று பேசினார்.

ஆர் சுந்தர்ராஜன் இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா? அதில் ஒன்று ரஜினி படம்..!

images 11

மேலும் கண் தானம் மட்டுமல்ல வேறு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த உதவியும் உங்களுக்காக நான் செய்ய தயாராக இருக்கிறேன், எனது ரசிகர்களும் தயாராக இருப்பார்கள் என்று ரஜினிகாந்த் கூறினார்.

அவர் சொன்னது போலவே அன்றைய நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண் தானம் செய்ய விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து சங்கரா நேத்ராலயா டாக்டர் பத்ரி அவர்கள் ஆச்சரியமடைந்தார். நாங்கள் பல வருடங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கண் தானம் செய்ய சொல்லி வலியுறுத்திய போது கூட ஒரு சிலர் மட்டுமே கண் தானம் செய்ய வருவார்கள். ஆனால் ரஜினிகாந்த் சொன்ன ஒரு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்ததை பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்தார்.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

இந்த விழா மனிதன் பட வெற்றி விழாவாக மட்டுமின்றி கண்தான விழிப்புணர்ச்சி விழாவாகவும் நடந்தது. மலைபோல் குவிந்தான கண் தான விண்ணப்பங்கள். இந்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

மேலும் உங்களுக்காக...