உத்திரபிரதேச மாநிலத்தில் வெகு விமசியாக நடந்து வரும் ஒரு திருவிழா தான் மகா கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை தான் இந்த மகா கும்பமேளா. இந்த நேரத்தில் திரிவேணி சங்கத்தில் கங்கையில் புனித நீராடினால் பாவங்கள் தொலைந்து புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களில் நம்பிக்கை.
இந்த மகா கும்பமேளா மூலம் வைரலான ஒரு பெண்தான் மோனலிசா போஸ்லே. இவரது அழகான கண்களும் புன்னகையும் இணையத்தில் வைரலானது. ஒரே நாளில் ஒரு போட்டோ மற்றும் வீடியோ மூலம் உலக பேமஸ் ஆகிவிட்டார் மோனலிசா போஸ்லே. இவர் மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் விற்று பிழைப்பை நடத்தும் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் தான் மோனலிசா போஸ்லே.
இவர் வைரலானவுடன் அனைவரும் இவரை தேடி சென்றதால் பயந்து போய் இவரது தந்தை மோனலிசாவை சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்று விட்டார். தற்போது பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா இந்த வைரல் பெண்ணான மோனலிசா போஸ்லேயை வைத்து படம் இயக்கப் போவதாக நேரடியாக அவரது கிராமத்திற்கு சென்று கூறி வாய்ப்பளிப்பதாக அழைத்து வந்திருக்கிறார்.
தற்போது பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் மோனாலிசா போஸ்லே வின் முதல் படத்திற்கான சம்பளம் 21 லட்சம். இது மட்டுமில்லாமல் பல விளம்பர திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதற்காக 15 லட்சம் வரை பெற்றிருக்கிறார் மோனலிசா போஸ்லே. ஒரே போட்டோவின் மூலம் உலக பேமஸான மோனலிசா போஸ்லே தற்போது பிஸியான நடிகையாக வளர்ந்து வருவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.