இயக்குனர்களே வில்லன் ஆனால்….! தமிழ்சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படங்கள்

Published:

தமிழ்சினிமாவில் ஒருகாலத்தில் வில்லன்களுக்கு என்று தனி நடிகர்கள் இருந்தனர். அவர்கள் எந்தப் படத்தில் நடித்தாலும் வில்லனாகவே வருவர். அதன்பிறகு நடிகர்கள் வில்லன் ஆனார்கள். நடிகைகளும் வில்லி ஆனார்கள். தற்போது இயக்குனர்களே வில்லனாக உருவெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னென்ன படங்கள் என்று பார்க்கலாமா…

கமல்

உலகநாயகன் கமல் தமிழ் சினிமாவில் பல கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ளார். வில்லனாக இவர் நடித்த படம் ஆளவந்தான். அதுவும் மிரட்டும் வில்லனாக வருவார். கடவுள் பாதி… மிருகம் பாதி என்று சொல்லும் இவரது கர்ஜனை குரல் மட்டும் அல்லாமல் பாடி லாங்குவேஜூம், இந்த கேரக்டருக்காக இவர் உடலை ஏற்றி முறுக்கேற்றி வைத்திருந்ததும் நம்மைப் பார்ப்பதற்கே மிரட்டியது.

இந்தக் கேரக்டருக்காக மொட்டை அடித்து படத்தில் நிர்வாணமாகவும் நடித்தது கூடுதல் ஆச்சரியம். படத்தில் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விட்டன.

சத்யராஜ்

Sathyaraj 1
Sathyaraj

புரட்சி நடிகர் சத்யராஜ் நூறாவது நாள், அமைதிப்படை, வில்லாதி வில்லன் ஆகிய படங்களில் வில்லனாக வந்து அசத்தியுள்ளார். இவர் நடிகர் தானே எப்போது டைரக்டர் ஆனார் என்று கேட்கலாம். இவர் டைரக்ட் செய்த படம் தான் வில்லாதி வில்லன். இவருக்கு இது 125வது படம். 1995ல் வெளியானது. இது ஒரு அதிரடி படம்.

கே.எஸ்.ரவிக்குமார்

K.S.Ravikumar
K.S.Ravikumar

ரஜினிகாந்த், கமல், சரத்குமாரை வைத்துப் பல முத்து, படையப்பா, தெனாலி, அவ்வை சண்முகி, நாட்டாமை, நட்புக்காக ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர். சேரன் பாண்டியன், சூரியன் சந்திரன், பேண்டு மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

மணிவண்ணன்

Manivannan
Manivannan

சின்னத்தம்பி பெரிய தம்பி, நூறாவது நாள், இளமைக் காலங்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் 1988ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

கௌதம் மேனன்

Gowtham menon
Gowtham menon

வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், வாரணம் ஆயிரம், மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் மேனன். இவர் தற்போது 13, மைக்கேல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மைக்கேல் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...