இறுதிவரை போராடிய டெல்லி.. சூப்பராக வெற்றி பெற்ற ஐதராபாத்..!

Published:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நாற்பதாவது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் டெல்லி அணி கடைசி வரை போராடி வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணியும் 6 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பதும் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

srh vs dc1 1 1 இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா 67 ரன்களும் கிளாஸன் 53 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 198 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. கேப்டன் டேவிட் வார்னர் இரண்டாவது பந்திலேயே புவனேஷ் குமார் பந்தில் போல்டாகி அவுட் ஆனார். இதனை அடுத்து சால்ட் மற்றும் மார்ஷ் ஆகிய இருவரும் ஓரளவுக்கு அடித்து ஆடி ஸ்கோரை நெருங்கினாலும், இவர்கள் இருவரும் அவுட் ஆன பின்னர் வந்த மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அக்சர்பட்டேல் கடைசி நேரத்தில் ஓரளவுக்கு சிக்சர் அடித்தாலும் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

srh vs dc

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் டெல்லி அணி மீண்டும் பத்தாவது இடத்திலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நான்கு இடங்களில் குஜராத் ராஜஸ்தான் லக்னோ மற்றும் சென்னை அணிகள் உள்ளன.

இந்த நிலையில் நாளை ஐபிஎல் தொடரின் 1000வது போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியவை அடுத்து நாளை 1000வது போட்டி என்பது மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன

மேலும் உங்களுக்காக...