திருவண்ணாமலை கோவிலில் வம்சி குடும்பத்துடன் சாமி தரிசனம்.. அடுத்த படத்திலும் விஜய்யா?

By Bala Siva

Published:

சமீபத்தில் வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி திருவண்ணாமலை கோயிலில் தனது குடும்பத்தினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

விஜய் நடித்த வாரிசு என்ற திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. முதலில் இந்த படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும் குடும்பத்துடன் படம் பார்க்கும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் வந்ததை அடுத்து இந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமானது.

குறிப்பாக அம்மா சென்டிமென்ட் அப்பா சென்டிமென்ட் உள்ள படங்கள் வெளியாகி மிக அதிக காலம் ஆகிவிட்டதை அடுத்து இந்த படம் குடும்ப ஆடியன்ஸ்களுக்கு மிகப்பெரிய அளவில் பிடித்து விட்டது. அதனால் கூட்டம் கூட்டமாக திரையரங்கில் குவிந்ததால் இந்த படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் 300 கோடி வசூல் என்ற இலக்கை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வாரிசு படத்தை இயக்கிய வம்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்ததை அடுத்து அவருக்கு தமிழ் தெலுங்கில் படங்கள் இயக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வம்சி இன்று திருவண்ணாமலையில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதனை அடுத்து அவரிடம் ரசிகர்கள் அடுத்த படத்திலும் விஜய் வைத்து இயக்குவீர்களா? என்று கேட்டதற்கு விஜய்யை இயக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் உங்களுக்காக...