அதிக மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டா? கலெக்டர் விளக்கம்!

Published:

பொங்கல் விடுமுறை தினத்தில் அதிகமாக டாஸ்மாக் விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தபோது டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தில் கூறியிருப்பதாவது வரும் காலங்களில் இது போன்ற நுட்பமான மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்கள் கவனமுடன் கையாளப்படும் என்றும் டாஸ்மாக் அலுவலர்களுக்கு விருது வழங்குவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்றும் மீண்டும் ஒருமுறை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.

tasmacசுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்குவது நடைமுறையான ஒன்று என்றும் ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலகர் பரிந்துரை செய்யப்படும் ஊழியர்களுக்கு பாராட்டு விருது வழங்கப்படும் என்றும் அந்த வகையில் இந்த ஆண்டு 387 பேருக்கு விருதுகள் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் அதிகமாக மது விற்பனை செய்ததற்காக விருது வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இந்த விளக்கத்தை கலெக்டர் அளித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் டாஸ்மார்க் பணியாளர்களுக்கு விருது வழங்குவது இது முதல் முறை அல்ல, பல ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளது என்றும் பாராட்டு சான்றிதழில் இடம் பெற்ற சொற்கள் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நடைமுறைகளில் தயாரிக்கப்பட்டது என்றும் இந்த ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில் அவர்கள் பணியை பாராட்டும் வகையில் நடைபெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...