இந்தியா வெற்றி பெற்ற நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகள்: என்னென்ன தெரியுமா?

Published:

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் ஒரே ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இரண்டு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நேற்றைய போட்டியில் தான் மிகவும் குறைவான ரன் ரேட் இரு அணிகளும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

indiawon1இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே நேற்றைய போட்டியில் 5.02 ரன் ரேட்டை மட்டுமே பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் சராசரியாக ஆறு, ஏழு என்று ரன் ரேட் குவியும், ஒருசில போட்டிகளில் 10 ரன்ரேட் கூட வந்துள்ளது. ஆனால் நேற்று மிகவும் குறைவான ரன் ரேட்களை இரு அணிகளும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் குறைவான ரன்ரேட் கொண்ட டி20 போட்டிகளின் விபரங்கள் இதோ:

5.02 – இந்தியா v நியூசிலாந்து 2023
5.21 – இந்தியா v இலங்கை, 2016
5.37 – இந்தியா v நியூசிலாந்து, 2016
5.44 – இந்தியா v தென்னாப்பிரிக்கா, 2015
5.59 – இந்தியா v இலங்கை, 2016

அதேபோல் நேற்றைய போட்டியில் அதிக பந்துகள் சுழல் பந்துவீச்சாளர்களால் வீசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, டி20 போட்டி என்றாலே சுழல் பந்துவீச்சாளர்கள் குறைவாக இருப்பார்கள் என்பதும் குறைவான சுழல் பந்துவீச்சுகள் தான் வீச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் மொத்தமுள்ள 40 ஓவர்களில் அதாவது 240 பந்துகளில் 179 பந்துகள் சுழற் பந்துவீச்சாளர்களால் வீசப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் அதிக சுழற்பந்துகள் வீசப்பட்ட டி20 போட்டிகளின் விபரங்கள் இதோ:

179 – இந்தியா v நியூசிலாந்து 2023
168 – வங்கதேசம் v பாகிஸ்தான் , 2011
156 – ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் , 2012
156 – இங்கிலாந்து v பாகிஸ்தான் , 2021
154 – இந்தியா v மே.இ.தீவுகள், 2014

மேலும் உங்களுக்காக...