குடித்து விட்டு வசனம் எழுதிய இயக்குநர்.. கௌதம் வாசுதேவ் மேனனக்கு முகவரி கொடுத்த மின்னலே படத்தில் நடந்த சம்பவம்

Published:

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் உதவியாளராக இருந்து மின்னலே படம் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்து தற்போது நடிப்பிலும், இயக்கத்திலும் ஸ்டைலிஷ் திரைக்கலைஞராக மிளிர்கிறார்.

ஆனால் இவர் இயக்குநராக தடம் பதித்த முதல் படமான மின்னலே திரைப்படத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் யார் தெரியுமா? தினந்தோறும் என்ற படத்தின் மூலம் முரளிக்காக வித்யாசமான காதல் கதையை உருவாக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் நாகராஜன் என்பவர் தான்.

சமீபத்தில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ராலட்சுமணன் உடனான பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனனின் நட்பு குறித்து அழகாகப் பேசியிருக்கிறார் நாகராஜன். தினந்தோறும் திரைப்படத்திற்குப் பிறகு சில படங்களில் தலைகாட்டிய நாகராஜ் மதுவுக்கு அடிமையானார்.

மிகச் சிறந்த திரைக்கதை, வசன எழுத்தாளரான அவர் சினிமாவில் திறமைசாலி. இவருடைய திறமையை தயாரிப்பாளர்கள் பயன்படுத்த முன்னெடுத்த போதும் மதுவிற்காக அடிமையாகி தன் சினிமா வாழ்க்கையைத் தொலைத்தவர். கடந்த 2013-ல் மத்தாப்பூ என்ற படத்தினை இயக்கினார்.

விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்லவன்.. திருச்சிற்றம்பலம்.. 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம்!

இயக்குநர் பிரவீன் காந்தி இவரின் நெருங்கிய நண்பர். பிரவீன் காந்தி இயக்கிய ஜோடி திரைப்படத்தில் வசனம் எழுதி சிறு காட்சியிலும் நடித்தார் நாகராஜன். இப்படத்தின் ஹிட்டுக்குப் பின் தயாரிப்பாளர் முரளி மனோகர் அவரை அழைத்திருக்கிறார். அப்போது தீவிர மதுபோதைக்கு அடிமையாகியிருந்த நாகராஜை அவரின் திறமையை வீணாக்கக் கூடாது என எண்ணினான் தயாரிப்பாளர். அப்போது புதுமுக இயக்குநராக வாய்ப்புத் தேடி ஒரு வழியாக மாதவன் கால்ஷீட் பெற்று மின்னலே கதையைத் தயாராக வைத்திருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன்.

இயக்குநர் நாகராஜனை கௌதம் மேனனிடம் அறிமுகப்படுத்தி வைத்த தயாரிப்பாளர் முரளி மனோகர் மின்னலே திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு உதவும்படி சொல்ல, அப்போது கதையைக் கேட்டு உடனே வசனம் எழுத ஆரம்பித்திருக்கிறார் நாகராஜன். ஆனால் இவர் மது அருந்தியிருந்தது கண்டு யோசித்திருக்கிறார் இயக்குநர் கௌதம்.

எனினும் அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக வசனங்கள் அருமையாக வர படத்தின் ஸ்கிரிப்ட் தயாரானது. இதன்பின் மின்னலே படத்தின் முதல் நாள் ஷுட்டிங்கிற்கு அவரை அழைத்து மரியாதை செய்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவரின் இரண்டாவது படமான காக்க காக்க படத்திற்கும் வசனம் எழுதும் பொறுப்பு நாகராஜனுக்கே வந்திருக்கிறது. இந்தப் படமும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...