ஒழுங்கா கூட கதை கேட்க மாட்டாரு.. அஜித்தை பற்றிய ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் இயக்குனர்!

Published:

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இன்று ஒட்டுமொத்த தமிழகமே ஆச்சரியத்தோடு பார்க்கும் நடிகராக இருக்கிறார் என்றால் அஜித்தின் தனிமனித உழைப்பும் கடின முயற்சியுமே காரணமாகும்.

ஆரம்ப காலங்களில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்த அஜித் வெள்ளித்திரையில் தலை காட்ட ஆரம்பித்தார். அதன் பின் தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இன்று டாப் 2 நடிகர்களில் ஒருவராக அஜித் இருந்து வருகிறார்.

Ajith Kumar

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் இவர்களின் வரிசையில் விஜய் – அஜித் என மாபெரும் ஆளுமையாக அஜித் இருக்கிறார். இந்த நிலையில் அஜித்தை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை திரைப்பட இயக்குனர் முரளி அப்பாஸ் ஒரு பேட்டியில் கூறினார்.

அதாவது சினிமாவிற்குள் புதிதாக வந்தப் பிறகு மேக்கப் எல்லாம் போடமாட்டாராம் அஜித். சூட்டிங் வந்ததும் வெண்ணீருதான் வாங்குவாராம். அதை வைத்து தான் தன் முகத்தை கழுவி விட்டு ஷார்ட்டுக்கு ரெடியாகுவாராம். சிட்டிசன் படத்திற்காகத்தான் முதன் முதலில் மேக்கப்பே போட்டாராம்.

ஒரு வாரத்தில் ரிலீஸ்.. ஒட்டுமொத்த கதையையும் மாற்ற சொன்ன ராவுத்தர்.. விஜயகாந்த் படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி..!

மேலும் உணவுகளை விரும்பி சாப்பிடக்கூடியவராம் அஜித். எங்கு போனாலும் தனக்கு பிடித்தமான உணவுகளை ஹோட்டலில் இருந்து வரவழைத்து சாப்பிடுவாராம். யாரை பற்றியும் தேவையில்லாமல் பேசமாட்டாராம். ரசிகர்களை சந்திக்க கூடாது என்பது அவரது எண்ணம் இல்லையாம். அதனால் வரும் அசௌகரியங்களை ஏன் சந்திக்க வேண்டும் என்றுதான் நினைப்பாராம்.

Ajith Kumar

மேலும் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கதை கூட ஒழுங்காக கேட்கமாட்டாராம். ஏன் கேட்கவில்லை என்று கேட்டால் அவர்களின் படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும் என இயக்குனரோ தயாரிப்பாளரோ நினைக்கத்தானே செய்வார்கள், அப்படி இருக்க தேவையில்லாத கதையை சொல்லமாட்டார்கள் என கூறிவிடுவாராம்.

முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!

இதை பற்றி குறிப்பிட்டு பேசிய முரளி அப்பாஸ் ‘எப்படித்தான் இப்படி இருக்கிறார் என்று தெரியவில்லை, ஒரு வேளை கடவுள் பக்தியாக கூட இருக்கலாம், அல்லது தன்னம்பிக்கையாக கூட இருக்கலாம்’ என்று கூறினார்.

மேலும் உங்களுக்காக...