ஒரு வாரத்தில் ரிலீஸ்.. ஒட்டுமொத்த கதையையும் மாற்ற சொன்ன ராவுத்தர்.. விஜயகாந்த் படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி..!

தமிழ் சினிமாவில் ஒரு தலைசிறந்த நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். மக்கள் செல்வாக்கு அதிகம் வாய்க்கப்பெற்றவர். அரசியலிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உன்னதமான தலைவர்.

அசைக்க முடியாமல் இருந்த இருபெரும் கட்சிகளை சுண்டு விரலால் ஆட்டியவர் விஜயகாந்த். எதற்கும் துணிந்தவர். மிகவும் தைரியமான நடிகரும் கூட. இவருக்கு பக்கபலமாக இருந்தவர் அவருடைய நெருங்கிய நண்பர் ராவுத்தர்.

Rawther

ஆரம்பகாலங்களில் இருந்து விஜயகாந்திற்கு துணையாக எல்லாமுமாக இருந்தவர் தான் ராவுத்தர். விஜயகாந்தை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். மேலும் விஜயகாந்தின் வரவு செலவுக் கணக்குகளை கூட ராவுத்தர்தான் பார்ப்பாராம். விஜயகாந்திற்கு வரும் கதைகளை கூட உன்னிப்பாக கேட்பாராம். கதை விவாதங்களில் கூட ஈடுபடுவாராம். ஒரு வேளை சரியாக இல்லையென்றால் மாற்றங்களை செய்ய சொல்வாராம்.

இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் ‘புலன் விசாரணை’. இந்தப் படம் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படத்தின் பிரிவ்யூவை ஜனவரி 5 ஆம் தேதி ராவுத்தர் பார்த்து விட்டு செல்வமணியிடம் படம் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். செல்வமணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாம்.

Rawther

மேலும் அந்தப் படத்தில் விஜயகாந்திற்கு ஒரு மகள் இருப்பார். அதை வைத்து சில பேர் ஹீரோவாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு மகள் இருக்கிற மாதிரி படம் வந்தால் இமேஜ் பாதிக்கப்படும் என கூறியிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் படத்தில் சரத்குமார் ஒரு டாக்டராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

என்னைப் போய் இப்படி ஆக்கிட்டாங்களே..? சத்யராஜ் வருத்தப்பட்ட கதாபாத்திரம்..!

க்ளைமாக்ஸ் காட்சியில் சரத்குமார் சட்டையை கழட்டிவிட்டு தான் சண்டை போட வேண்டும் என ராவுத்தர் அடம்பிடித்தாராம். ஆனால் செல்வமணியோ அவர் ஒரு டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறவர். அவர் போய் எப்படி சட்டையை கழட்டி உடலை காட்ட முடியும் என்று கேட்டிருக்கிறார்.

Pulan Visaranai

அதற்கு ராவுத்தர் இருந்தாலும் அது கெட்ட டாக்டர் தானே என்று சொல்லியிருக்கிறார். மேலும் ஒரு ஆங்கில படத்தை பார்த்து விட்டு அதில் இருக்கும் சில காட்சிகளையும் புலன் விசாரணை படத்தில் சேர்க்க சொல்லியிருக்கிறார் ராவுத்தர். இப்படி ஒரு வார இடைவெளியில் இந்த அளவு நெருக்கடியில் வெளியான படம் தான் புலன் விசாரணை என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.

முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.