சஃபாரி பிரெளசரில் புதிய அம்சங்கள்: ஆப்பிள் அறிவிப்பு..!

Published:

உலகின் பெரும்பாலான இணையதளவாசிகள் கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களை பயன்படுத்தினாலும் வெகு சிலர் சஃபாரி பிரவுசர்களையும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சஃபாரி பிரவுசரில் சில தனிப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சஃபாரி ப்ரவுசரை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை கலந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் இந்த பிரவுசரை மேம்படுத்த சில முக்கிய அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு, கண்காணிப்பு தடுப்பு, மூன்றாம் தரப்பு டிராக்கர்களை இணையதளங்களில் உள்ள பயனர்களை கண்காணிப்பதை தடுப்பது, தனி உரிமை அம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை சஃபாரி பிரவுசர் தற்போது இணைத்துள்ளது. மேலும் எத்தனை டிராக்கர்களை சஃபாரி பிரவுசர் தடுத்தது என்பது குறித்த தகவல்களையும் பயனர்களுக்கு இந்த பிரவுசர் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சஃபாரி பிரவுசரில் உள்ள சில முக்கிய அம்சங்கள் இதோ:

இணையதளங்கள் முழுவதும் உள்ள பயனர்களைக் கண்காணிப்பதில் இருந்து அதிகமான மூன்றாம் தரப்பு டிராக்கர்களைத் தடுக்க நுண்ணறிவு கண்காணிப்புத் தடுப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது

யனர்களுக்கு எத்தனை டிராக்கர்கள் தடுக்கப்பட்டது மற்றும் எவ்வளவு தரவு சேமிக்கப்பட்டது என்பதற்கான டேட்டாவை காட்டுகிறது. பயனர்கள் சபாரியை பயன்படுத்தும்போது அவர்களின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.

புமேலும் பாஸ்வேர்டுகளை நிர்வகிப்பது உள்பட பல முக்கிய அம்சங்களை சஃபாரி இணைத்துள்ளதால் இந்த பிரெளசரை பயன்படுத்தும் இணையதள பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...