புரோட்டா சூரிக்கு அடுத்து ‘புஷ்பா புருஷன்‘ சூரி..காமெடி இப்படித்தான் உருவாச்சா? இயக்குநர் எழில் சொன்ன சீக்ரெட்

Published:

பல படங்களில் துணை நடிகராக நடித்து இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு படம் மூலமாக திரையில் தனது புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. இன்று வெற்றி மாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டார். மேலும் 2015-க்குப் பின் இவர் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவிற்கு பல படங்களில் மளமளவென நடிக்க ஆரம்பித்தார். புரோட்டா காமெடி இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்க முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரத் தொடங்கினார்.

சந்தானத்திற்கு அடுத்தபடியாக காமெடி இடத்தை நிரப்பினார் சூரி. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் கொடுக்க சூரியின் காமெடிக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. மதுரை மொழியில் வட்டார வழக்கில் இவர் பேசும் வசனங்கள் பாமரனையும் சிரிக்க வைத்தது.

இதனையடுத்து கடந்த 2016-ல் வெளிவந்த படமான இயக்குநர் எழிலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலும் இவரின் காமெடி பெரிதும் ரசிக்கப்பட்டது. புரோட்டா சூரி இதில் புஷ்பா புருஷன் சக்கரையாக பின்னி எடுத்தார். தனது முதல்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலுடன் அறிமுகமான சூரி மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இந்தப் படத்தில் இணைந்து ரசிக்க வைத்தார்.

45 நிமிடத்தில் 4 ஜாம்பவான்கள் மேடையில் நடத்திய மேஜிக்..மிரண்டு போன ரசிகர்கள்

எம்.எல்.ஏ நடத்தி வைக்கும் இலவச திருமணத்தில் புஷ்பா புருஷனாக நடித்து பின்னர் அவரை அனைவரும் கேலி செய்வது போல் அமைந்த கதாபாத்திரம் இன்றும் வயிற்றைப் பதம் பார்க்கும். மேலும் புஷ்பாவாக ரேஷ்மா பசுபுலேட்டியும் அசத்தியிருப்பார். இயக்குநர் எழில் இந்தக் காமெடி உருவான கதை பற்றிக் கூறும் போது,

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட ஸ்கிரிப்ட் முழுவதும் தயாராகி விட்ட பிறகு அவருடைய கதாசிரியர் தான் வைத்திருந்த ஸ்கிரிப்ட் ஒன்றை இந்தப் படத்திற்குப் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறினாராம். மேலும் அதை தான் நாடகமாகவும் எடுக்கப் போவதாவும் தெரிவித்த பொழுது, இயக்குநர் எழில் இந்தக் ஸ்கிரிப்டை நாடகமாக எடுக்க வேண்டாம் என்ற கூறினாராம்.

ஆனால் கதைப்படி இது செட் ஆகவில்லை. எனினும் அதில் சில மாற்றங்களைச் செய்து புஷ்பா புருஷன் காமெடியை உருவாக்கினார்களாம். இது சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. சொன்னமாதிரியே படமும் ஹிட் ஆகி காமெடியும் பெரிதும் பேசப்பட்டது.

புரோட்டா சூரி இந்தப் படம் மூலமாக புஷ்பா புருஷன் சூரியாக மாறியது இப்படித்தான்.

மேலும் உங்களுக்காக...