எம்ஜிஆர்- சிவாஜி, கமல்-ரஜினி.. இரு தலைமுறை நடிகர்களுக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்..!

By Bala Siva

Published:

எம்ஜிஆர் – சிவாஜி, கமல்-ரஜினி என இரண்டு தலைமுறை நடிகர்களுக்கும் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்கள் வெகு சிலர் மட்டுமே தமிழ் திரையுலகில் இருந்தனர். அவர்களின் ஒருவர் தான் ஏ.ஜெகநாதன். கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்த ஜெகநாதன் சிறுவயதிலேயே திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார்.

அவர் பிரபல இயக்குனர்கள் டி பிரகாஷ் ராவ் மற்றும் ப நீங்கலகண்டன் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் பணிபுரிந்தது அனைத்துமே கிட்டத்தட்ட எம்ஜிஆர் படங்கள். அடுத்து சத்யா மூவிஸ் ஆர்.எம். வீரப்பன் தயாரிப்பில் உருவான மணிப்பயல் என்ற திரைப்படத்தில் ஜெகந்நாதன் இயக்குனராக அறிமுகமானார்.

இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!

ஏவிஎம் ராஜன், ஜெயந்தி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தான் அவருக்கு ஆர்.எம். வீரப்பன், இதயக்கனி என்ற எம்ஜிஆர் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இயக்குனர் ஜெகநாதனை முன்னணி இயக்குனர்கள் பட்டியலுக்கு கொண்டு வந்தது.

இதனை அடுத்து அவர் கமல்ஹாசன் நடித்த குமார விஜயம் உள்பட ஒரு சில படங்களை இயக்கிய நிலையில் தான் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் என்ற திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். குறிப்பாக அலெக்ஸ் பாண்டியன் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை.. கடைசி காலத்தில் வறுமை.. நடிகை பிந்துகோஷ் கதை..!

மூன்று முகம் கொடுத்த மாபெரும் வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் நடித்த தங்க மகன், சிவாஜி கணேசன் நடித்த வெள்ளை ரோஜா, உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து தியாகராஜன் ஹீரோவாக நடித்த கொம்பேறி மூக்கன், விஜயகாந்த் நடித்த நாளை உனது நாள் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

அதன் பின்னர் கமல்ஹாசன் நடித்த காதல் பரிசு என்ற படத்தை இயக்கிய அவர், சிவாஜி கணேசன், சத்யராஜ், பாண்டியராஜன் ஆகிய மூன்று ஹீரோக்கள் நடித்த முத்துக்கள் மூன்று என்ற படத்தை இயக்கினார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

எம்ஜிஆர் நடித்த இதயக்கனி, சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா, கமல்ஹாசன் நடித்த காதல் பரிசு, ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் என இரண்டு தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்த ஜெகநாதன் கடைசியாக கைதி நம்பர் ஒன் என்ற திரைப்படத்தை கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்கினார். இதன்பிறகு இவர் சில வருடங்கள் திரைப்படங்கள் இயக்காமல் இருந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.