ஒரே நேரத்தில் 2 படங்கள்… டென்ஷன் ஆன கமல்… வெற்றிப்படங்களின் இயக்குனர் ராஜசேகர்…!!

Published:

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்களின் படங்களை இயக்குவது என்பதே ஒரு பெரிய சாதனை என்ற நிலையில் இருவர் படங்களையும் ஒரே நேரத்தில் ஒரு இயக்குனர் இயக்கி இருந்தார். அவர்தான் இயக்குனர் ராஜசேகர்.

கடந்த 80களில் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக இருந்தவர் ராஜசேகர். ராபர்ட் ராஜசேகரன் என்ற இரட்டையர்களில் ஒருவர் இவர் என்று சிலர் குழப்பி கொள்வார்கள். ஆனால் அவர் வேறு, இவர் வேறு.

ஒரே படத்தில் 11 அவதாரம்… நம்பியார் ஃப்ர்ஸ்ட் கமல் நெக்ஸ்ட்… எந்த படம் தெரியுமா…..?

கண்ணீர் பூக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ராஜசேகர் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களை இயக்கிய அவருக்கு ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு என்ற திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் ராஜசேகரின் திரை உலக வாழ்வில் திருப்புமுனை என்று கூறலாம்.

இதனை அடுத்து சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் மற்றும் கமல்ஹாசன் நடித்த காக்கிச்சட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் 1985 ஆம் ஆண்டு வெளியானது.

இதை அடுத்து தமிழ்த்திரை உலகின் முதல் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படமான விக்ரம் படத்தை ராஜசேகர் இயக்கினார். கமல்ஹாசன் நடிப்பில் சுஜாதா கதை வசனத்தில் இந்த படம் உருவாகிக் கொண்டிருந்தபோதே திடீரென அவர் ரஜினி படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமானார். அந்த படம் தான் மாவீரன்.

விக்ரம் படத்தை முதல் பாதியை எடுத்துவிட்டு அந்த படத்தை அம்போ என விட்டு விட்டு அவர் மாவீரன் படத்தை இயக்க சென்று விட்டதால் கமல்ஹாசன் அதிருப்தி அடைந்தார். ஒரு சில காட்சிகளை கமல்ஹாசன், சந்தான பாரதியை வைத்து எடுத்ததாக கூறப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாதி சொதப்பலுக்கு ராஜசேகர் கைவிட்டு சென்றதுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

இப்போது உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ… அப்போது பாழடைந்த பங்களா.. கமல் பட கிளைமாக்ஸ் இங்கே தான்..!!

அதன் பிறகு மாவீரன் படத்தை முடித்துவிட்டு தான் மீண்டும் விக்ரம் படத்தை இயக்க ராஜசேகர் வந்ததாகவும் இருப்பினும் விக்ரம் படம் தான் மாவீரன் படத்திற்கு முன்பே வெளியானது.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த லட்சுமி வந்தாச்சு, விஜயகாந்த் நடித்த கூலிக்காரன், சரண்ராஜ் நடித்த கழுகுமலை கள்ளன் போன்ற படங்களை ராஜசேகர் இயக்கினார். அந்த படங்கள் சுமாரான வெற்றியை தந்த நிலையில் ராஜசேகருக்கு மீண்டும் திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது பாட்டி சொல்லை தட்டாதே. மனோரமா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்டது. பாண்டியராஜன் ஊர்வசி காமெடி, மனோரமா எஸ் எஸ் சந்திரன் காமெடி கலக்கியது.

இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியின் காரணமாக தான் மீண்டும் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு ராஜசேகருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தான் தமிழ் திரை உலகில் அதுவரை யாரும் வாங்காத மிகப்பெரிய சம்பளத்தை ரஜினிபடங்களைகாந்த் வாங்கினார். இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி தயாரித்திருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை என்ற திரைப்படத்தை ராஜசேகர் இயக்கினார். அண்ணனுக்கு துரோகம் செய்யும் தம்பிகள் குறித்த கதை அம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென கார் விபத்தில் ராஜசேகர் காலமானார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் சத்யராஜ் ஹீரோ.. சூப்பர்ஹிட்டான ஆச்சரியம்..!

ரஜினி கமல் ஆகிய இருவருக்குமே அதிக வெற்றி படங்களை கொடுத்த ராஜசேகர் இன்னும் நிறைய படங்களை இயக்கி சாதனை செய்திருக்க வேண்டியவர், திடீரென கார் விபத்தில் காலமானது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய துரதிஷ்டமே.

மேலும் உங்களுக்காக...